விளையாட்டு வினையாகும் என்றார்கள் நம் முன்னோர்கள். அதை இப்பவும் நிரூபிக்கப்படுகிறது, பின்விளைவுகளை யோசிக்காமல் செயல்படும் இளையத் தலைமுறையினரால்.
பப்ஜி மோகம்
இளையத் தலைமுறையினரக்கு போன் மூலம் விளையாடும் விளையாட்டில் அதிக மோகம் காணப்படுகிறது. ஒரு கட்டத்தில் அந்த விளையாட்டிற்காக எதையும் இழக்க இவர்கள் துணிந்துவிடுகிறார்கள். ஏன் உயிர்கூட அவர்களுககு துச்சம்தான். அந்த வகையில், ஜெய்ப்பூர் அருகே தண்டவாளத்தில் அமர்ந்து பப்ஜி விளையாடிய அண்ணன் - தம்பி ரயில் மோதி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாடுவதே குறிக்கோள் (The goal is to play)
ராஜஸ்தான் மாநிலம் ஆழ்வார் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர்கள் லோகேஷ், ராகுல். அண்ணன், தம்பியான இவர்கள் இருவரும் பப்ஜி விளையாட்டு மீது தீவிர ஆர்வம் கொண்டவர்கள். குடும்பத்தினர்கள் கண்டித்தாலும், அதை ஒருபோதும் காதில் போட்டுக்கொள்ள மாட்டார்கள். எப்போதும் பப்ஜி விளையாடிக்கொண்டே இருப்பார்கள்.
தண்டவாளத்தில் சாகசம் (Adventure on the tracks)
லோகேஷ், ராகுல் இருவரும் போட்டித்தேர்வுக்காக படித்து வந்தனர். இதற்காக படிக்க செல்வதாக வீட்டில் பொய் சொல்லிவிட்டு, தங்கள் பகுதியில் செல்லும் தண்டவாளத்தில் அமர்ந்து பப்ஜி விளையாடினார்கள். தீவிரமாக பப்ஜி விளையாட்டில் கவனம் செலுத்தியதா
கடைசிக் கட்ட முயற்சி வீண்
ரயில் என்ஜின் டிரைவர் ஒலியெழுப்பியும் அண்ணன், தம்பி இருவரும் பப்ஜி விளையாடிக்கொண்டு இருந்தனர். அடுத்த சில வினாடிகளில் அவர்கள் இருவர் மீதும் ரயில் மோதியது. சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார்கள்.
விளையாட்டு உயிரை பலிவாங்கியது
விளையாட்டில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, எதார்த்தத்தைப் புரிந்துகொண்டிருந்தால், இவர்களது இன்னுயிர் போயிருக்காது என்பதுதான் உண்மை.
மேலும் படிக்க...