Blogs

Saturday, 27 August 2022 12:41 PM , by: Elavarse Sivakumar

செல்லப் பிராணிகளாக பூனை, நாய் வளர்ப்போர் அதற்கான லைசன்ஸைப் பெறுவதுக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே இனி லைசன்ஸ் இல்லாமல் அவற்றை வளர்க்க முடியாது மக்களே!

செல்லப்பிராணிகள் வீட்டில் இருப்பது, நமக்கு மனதளவில் மகிழ்ச்சியையும், ஒரு உத்வேகத்தையும் உருவாக்கும். அவற்றை வளர்ப்போருக்கு இந்த அனுபவம் கிடைக்கும். இதனை அவர்கள் மிகவும் விரும்புவார்கள்.
ஆனால் மற்றவர்களுக்கோ, இது மிகப்பெரிய இடையூறாகவேத் தென்படும்.
இது ஒருபுறமிருக்கு, செல்லப்பிராணிகளை வளர்ப்போருக்கு, சென்னை மாநகராட்சி புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

இதன்படி,செல்லப்பிராணிகளுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படுகிறது. செல்லப்பிராணிகளுக்கான உரிமம் ரூ.50 கட்டணத்தில் புதுப்பிக்கும் வகையில் வழங்கப்படுகின்றது.

4 இடங்களில்

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- பெரும்பாலான மக்கள் செல்ல பிராணிகளான நாய், பூனை, பறவை இனங்கள் ஆகியவை அதிக எண்ணிக்கையில் வளர்த்து வருகின்றனர். செல்ல பிராணிகளுக்கு சிகிச்சை அளிக்க மாநகராட்சி சார்பில் 4 இடங்களில் (மண்டலம் 6, 9, 12, 141) சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

தடுப்பூசி

வெறிநாய்க்கடி நோய் இல்லா சென்னை என்ற இலக்கினை அடையும் பொருட்டு இம்மையங்களில் அனைத்து செல்லப்பிராணிகளுக்கும் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி முற்றிலும் இலவசமாக செலுத்தப்படுகிறது.

ரூ.50 கட்டணம்

பெருநகர சென்னை மாநகராட்சி விதிகளின்படி செல்லப்பிராணிகள் வளர்க்கும் உரிமையாளர்கள் அதற்கான உரிமம் பெற்றிருக்க வேண்டும். இதற்கென இம்மையங்களில் - செல்லப்பிராணிகளுக்கான உரிமம் ரூ.50 கட்டணத்தில் வருடத்துக்கு ஒரு முறை புதுப்பிக்கும் வகையில் வழங்கப்படுகின்றது. இந்த சேவையை முழுமையாக பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க....

தமிழக இளைஞர்களுக்கு வேலை- சென்னையில் சிறப்பு முகாம்!

வெறும் 750 ரூபாய்க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் கிடைக்கும்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)