மதுரையில் ஒரே கிராமத்தில் 50-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதால் அனைவரும் கும்பல் கும்பலாக இரண்டு ஆம்புலன்ஸ்களில் பயணம் செய்தது, அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா அச்சம் (Fear of corona)
நோய்கிறுமிக்குதான் நாம் எதிரியாக வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினாலும், கொரோனாத் தொற்று உறுதியான நபர்களை மற்றவர்கள் வேற்றுக்கிரகத்து வாசியாகவே அச்சத்துடன் பார்ப்பதைக் கடந்த சில மாதங்களாக வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
கொரோனா மயம் (Corona)
ஆனால், உனக்கும் கொரோனா, எனக்கும் கொரோனா, நம்ம எல்லாருக்கும் கொரோனா என்ற பாணியில், கொரோனா நோயாளிகள் ஒரே ஆம்புலன்ஸில் பயணித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
கொரோனா நோயாளிகள் (Corona patients)
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள பொன்னமங்களம் கிராமத்தில் ஏற்கனவே 100-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டது. இதையடுத்துக் கிராம மக்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்தனர். இதில் 50-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று கண்டறியப்பட்டது.
ஆம்புலன்ஸிற்கு காத்திருப்பு (Waiting for the ambulance)
டர்ந்து அந்த கிராமத்தை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்த சுகாதாரத் துறையினர், பாதிக்கப்பட்டோரைச் சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல அரசு ஆம்புலன்சை அழைத்திருந்தனர்.
கும்பலாகப் பயணம் (Traveling as a mob)
ஆனால், அரசு ஆம்புலன்ஸ் வர தாமதமானதாகக் கூறி, அந்த கிராம மக்களே 2 தனியார் ஆம்புலன்ஸ்களை வரவழைத்து கும்பலாகச் சிகிச்சை மையத்திற்கு அழைத்து சென்றனர்.
சர்ச்சை (Controversy)
ஒரு ஆம்புலன்ஸில் தலா 25 கொரோனா பாதித்தோர் பயணித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றி மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநரிடம் கேட்டபோது, 22 பேருக்கு மட்டுமே தொற்று உறுதியானதாகவும், தங்களிடம் தெரிவிக்காமல் கிராமத்தைச் சேர்ந்தவர்களே தனியார் ஆம்புலன்சை ஏற்பாடு செய்துவிட்டதாகவும் விளக்கமளித்துள்ளார்.
மேலும் படிக்க...
கால்நடைகளுக்கான தீவனப்பயிர் சாகுபடியில் விவசாயிகள் மும்முரம்!
முந்திரி சாகுபடியில் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி?
தென்னை மரங்களுக்கு இடையில் பசுந்தீவன சாகுபடி! இனி தீவனத் தட்டுப்பாடு இல்லை