1. செய்திகள்

கருப்பு பூஞ்சை: இந்த எளிய உதவிக்குறிப்புகள் மூலம் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளாம் !!

Sarita Shekar
Sarita Shekar

Protect Yourself from Black Fungus

இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் இரண்டாவது அலைக்கு மத்தியில், கருப்பு பூஞ்சை (மைக்கோரைசல் நோய்) மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி வருகிறது. பல மாநிலங்களில், இதன் விளைவாக மக்கள் இறந்துவிட்டனர். அதன் தீவிரத்தினால், பல மாநிலங்கள் இதை ஒரு தொற்றுநோயாக அறிவித்துள்ளன.

கருப்பு பூஞ்சை (Black Fungus) என்பது பற்கள், கண்கள், மூக்கு மற்றும் வாய் வழியாக மூளைக்கு பரவக்கூடிய ஒரு பூஞ்சை நோயாகும்.  கொரோனா வைரஸ் சிகிச்சையின் போது சிகிச்சைக்காக ஸ்டெராய்டுகள் வழங்கப்படும் நோயாளுக்கும்  நீண்ட நாட்களாக ஆக்ஸிஜன் ஆதரவில் உள்ள நோயாளிகளுக்கு இந்த தொற்று பெரும்பாலும் ஏற்படுகிறது.  கூடுதலாக, நீரிழிவு மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு கருப்பு பூஞ்சை உருவாகும் வாய்ப்பு அதிகம்.

கருப்பு பூஞ்சையின் ஆரம்ப அறிகுறிகளில் வாய்வழி திசு, நாக்கு மற்றும் ஈறு நிறமாற்றம் ஆகியவை அடங்கும். உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பதோடு, நமது வாயின் சுகாதாரத்தையும் கவனித்துக்கொண்டால் நாம் இந்த நோயிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம். நமது வாய் பகுதியை சுத்தமாக வைத்துக்கொள்ள சில எளிய உதவிக்குறிப்புகளை இங்கே காணலாம். இவற்றின் மூலம் கருப்பு பூஞ்சை நோய்க்கான சாத்தியக்கூறுகளையும் நாம் குறைக்கலாம்.

ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை பல் துலக்குங்கள்

COVID-19 சிகிச்சையின் போது பல நோயாளிகளுக்கு ஸ்டெராய்டுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஸ்டெராய்டுகள் மற்றும் பிற மருந்துகளின் நுகர்வு உங்கள் வாயில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை உருவாவதற்கும் வளர்வதற்கும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது. இதன் காரணமாக, சைனஸ், நுரையீரல் மற்றும் மூளையில் பல சிக்கலான பிரச்சினைகள் ஏற்படலாம். இதையெல்லாம் தவிர்க்க, ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு முதல் மூன்று முறை பல் துலக்குவது மிகவும் முக்கியமாகும். இப்படி செய்வதால், கருப்பு பூஞ்சையிலிருந்து நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

வாய் கொப்பளித்தல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

கோவிட் -19 தொற்றுநோயிலிருந்து குணமடைந்த பிறகும், அனைவரும் வாய்ப்பகுதியின் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். கொரோனாவின் பின் விளைவுகளிலிருந்து பாதுகாத்துக் கொள்வது மிகவும் முக்கியமாகும். கருப்பு பூஞ்சை உட்பட அனைத்து விதமான தொற்றுநோயையும் தடுக்க, தொற்றிலிருந்து குணமான அனைவரும் தவறாமல் வாயை அடிக்கடி கொப்பளிக்க வேண்டும். இதற்கு, சந்தையில் கிடைக்கும் ரின்சர் பிராடெக்டுகள், அதாவது கொப்பளிக்கும் திரவ பிராடெக்டுகளை பயன்படுத்தலாம். மேலும், கொரோனா நோயாளிகளின் பரிசோதனை முடிவு நெகடிவ் என வந்த பிறகு, அதாவது தொற்றிலிருந்து குணமானவுடன், அவர்கள் தங்கள் வாய் துலக்கும் பிரஷ்ஷை மாற்றுவது மிக முக்கியமாகும்

பிரஷ்கள் மற்றும் டங் கிளீனர்களை கிருமி நீக்கம் செய்யுங்கள்

நிபுணர்களின் கூற்றுப்படி, கோவிட்டிலிருந்து மீண்ட ஒருவர் தனது பிரஷ்ஷை வீட்டில் மற்றவர்களின் பிரஷ்ஷுடன் ஒரே இடத்தில் வைத்திருக்கக் கூடாது. அப்படி வைப்பதால், அது வீட்டில் உள்ள மற்றவர்களுக்கும் ஆபத்தாக அமையலாம். உங்கள் மற்றும் உங்கள் குடும்ப உறுப்பினரின் வாய்ப்பகுதியின் சுகாதாரத்திற்கு இது மிகவும் முக்கியமானதாகும். மேலும், ஆண்டிசெப்டிக் மவுத்வாஷைப் பயன்படுத்தி, உங்கள் பல் துலக்கும் பிரஷ் மற்றும் டங் கிளீனரை சுத்தப்படுத்துமாறும் நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்

மேலும் படிக்க..

யாரை தாக்கும் இந்த , ஆபத்தான வெள்ளை பூஞ்சை நோய்.. !

கரும்பூஞ்சை நோய்க்கு தமிழகத்தில் முதல் உயிரிழப்பு!

காற்றோட்டமான இடங்களில் கொரோனா தொற்று பரவல் குறைவு - புதிய வழிகாட்டு நெறிமுறைகள்!!

English Summary: Protect Yourself from Black Fungus , With These Simple Tips !!

Like this article?

Hey! I am Sarita Shekar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.