இந்தியத் தொழிலாளர்களின் சராசரி சம்பளம் சுமார் 46,000 ரூபாய் என ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. நேற்று சர்வதேச உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் தொழிலாளர்களின் சராசரி சம்பளம் குறித்த விவரங்களை World of Statistics நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி இந்தியாவில் தொழிலாளர்களின் சராசரி சம்பளம் சுமார் 46,000 ரூபாயாக இருக்கிறது.
சராசரி சம்பளம் (Average Salary)
உலகம் முழுவதும் 23 நாடுகளில் தொழிலாளர்களின் சராசரி சம்பளம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கிறது. உலகம் முழுவதும் தொழிலாளர்களுக்கு அதிக சம்பளம் வழங்கும் நாடுகளில் சுவிட்சர்லாந்து, லக்சம்பர்க், சிங்கப்பூர், அமெரிக்கா, ஐஸ்லாந்து, கத்தார், டென்மார்க், ஐக்கிய அரபு நாடுகள், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா ஆகியவை முதல் 10 இடங்களில் இருக்கின்றன.
இந்தியாவில் தொழிலாளர்களுக்கு சராசரி சம்பளம் 50,000 ரூபாய் விட குறைவாக இருக்கும் நிலையில் துருக்கி, பிரேசில், அர்ஜெண்டினா, இந்தோனேசியா, வங்கதேசம், வெனிசுலா, நைஜீரியா, எகிப்து, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இந்தியாவை விட சம்பளம் குறைவாக இருக்கிறது.
உலகளவில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சராசரி சம்பளம் அடிப்படையில் இந்தியா 65 ஆவது இடத்தில் இருக்கிறது.
அதிக சம்பளம் வழங்கும் நாடுகள் - சராசரி ஊதியம்
- சுவிட்சர்லாந்து - 6096 டாலர்
- லக்சம்பர்க் - 5015 டாலர்
- சிங்கப்பூர் - 4989 டாலர்
- அமெரிக்கா - 4245 டாலர்
- ஐஸ்லாந்து - 4007
- கத்தார் - 3,982
- டென்மார்க் - 3538 டாலர்
- ஐக்கிய அரபு நாடுகள் - 3498 டாலர்
- நெதர்லாந்து - 3494 டாலர்
- ஆஸ்திரேலியா - 3,391 டாலர்
இந்தியா
இந்தியாவில் தொழிலாளர்களுக்கு சராசரி சம்பளம் 573 டாலராக உள்ளது. 573 டாலர் என்பது 46,861 ரூபாய்.
மேலும் படிக்க
வீடு தேடி வரும் வங்கி சேவைகள்: யாருக்கெல்லாம் பொருந்தும்?
மத்திய அரசுப் பணியாளர்களுக்கு அருமையான அறிவிப்பு: 4% அகவிலைப்படி உயர்வு!