2023க்கான மதிப்புமிக்க 'தூய்மையான நகரங்கள்' விருதை பெற்றுள்ளன இந்தூர் மற்றும் சூரத் நகரங்கள். இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் நேற்று (வியாழன்) ஸ்வச் சர்வேக்ஷன் விருதுகளை வழங்கினார்.
ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் இந்தூர் மற்றும் சூரத் ஆகிய இரண்டு நகரங்களையும் நாட்டின் தூய்மையான நகரங்களாக அறிவித்தார்.
வாரனாசி மற்றும் பிரயாக்ராஜ் ஆகியன தூய்மையான கங்கை நகரங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
மத்திய பிரதேசத்தில் உள்ள MHOW கண்டோன்மென்ட் வாரியம் நாட்டின் தூய்மையான கண்டோன்மென்ட் நகரத்திற்கான விருதைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் செயலாளர் மனோஜ் ஜோஷி ஆகியோர் இந்த விழாவில் பங்கேற்றனர். இந்த நகரங்களின் சாதனைகளை அவர்கள் எடுத்துரைத்தனர்.
அவர்கள் எடுத்துரைத்தவை,
2016 முதல் ஸ்வச் பாரத் நகர்ப்புற இயக்கத்தின் கீழ் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் (MoHUA) ஏற்பாடு செய்த ஸ்வச் சர்வேக்ஷன், நகர்ப்புற சுகாதாரம் மற்றும் தூய்மை பற்றிய உலகின் மிகப்பெரிய கணக்கெடுப்பாக உள்ளது.
தூய்மை மற்றும் கழிவு மேலாண்மை சேவைகளை மேம்படுத்த நகரங்கள் மற்றும் நகரங்களுக்கான போட்டித் தளமாக செயல்படுவதையே இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் தூய்மையான நகரம் - இந்தூர்!
இந்தியாவின் மையப்பகுதியில் இந்தூர் அமைந்துள்ளது, நாட்டின் தூய்மையான நகரமாக அதன் நிலையான அங்கீகாரத்தை 7 ஆண்டுகளாக தற்காத்து வருகிறது.
துடிப்பான மற்றும் கலாச்சாரம் நிறைந்த நகரமான இந்தூர் வலுவான பொருளாதாரம் மற்றும் கல்வி நிறுவனங்களைக் கொண்டுள்ளது.
இது மத்திய பிரதேசத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். இது மத்திய பிரதேச மாநிலத்தின் வளர்ச்சிக்கு பெருந்துணையாகவும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சராஃபா பஜார்
சராஃபா பஜார் ஒரு காஸ்ட்ரோனமிக் (நல்ல உணவு தொடர்பான, சுவையுணவு சார்ந்த) புகலிடமாக மாறியதன் மூலம், இந்த நகரம் அதன் சுவையான தெரு உணவுகளுக்கு புகழ் பெற்றது.
இங்கு அமைந்துள்ள ராஜ்வாடா அரண்மனை மராட்டிய மற்றும் முகலாய கட்டிடக்கலை தாக்கத்தை பிரதிபலிக்கிறது.
குஜராத்தின் சூரத் - இரண்டாமிடம்!
குஜராத்தில் உள்ள சூரத், தபி ஆற்றின் கரையில் உள்ள ஒரு பரபரப்பான வணிக மற்றும் தொழில்துறை மையமாகும்.
வண்ணமயமான வைரம் மற்றும் ஜவுளித் தொழில்களுக்குப் பெயர் பெற்ற சூரத், நாட்டின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கு அமைந்துள்ள ஜெயின் கோயில்கள் மற்றும் இடைக்கால சூரத் கோட்டை போன்ற வரலாற்று சின்னங்களால் நகரத்தின் வளமான வரலாறு பிரதிபலிக்கிறது.
மேலும் படிக்க
சீஸ் (Cheese) பற்றி வியப்பூட்டும் 8 தகவல்கள் இதோ!
வருகை நாட்கள் அடிப்படையில் போக்குவரத்து அரசு ஊழியர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை அறிவிப்பு!