தொழில் முனைவராக மாற விரும்பும் மக்களுக்காக சிறப்பு விழிப்புணர்வு முகாம் வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை தொழில் முனைவோராக விரும்புவோர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தற்போது, தொழில்நுட்பத்துடன் மக்களின் வாழ்க்கை முறையும் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. இதனால் மக்களின் வேலைவாய்ப்பில் பெரிய மற்றம் ஏற்பட்டுள்ளது. பல வேலைகள் அழிந்து போனாலும், புது துறைகளில் புது விதமான வேலைகள் மக்களுக்கு கைகொடுக்கிறது. தொழிலாளர்களாக பணிபுரிவதிலிருந்து விடுபட்டு தனக்கென சொந்தமாக நிறுவனம் அல்லது வணிகம் ஆரம்பிப்பதில் பலர் ஆர்வம் காட்டுகின்றனர்.
பயிற்சி முகாம்
அப்படி சுலபமாக தொழில் ஆரம்பிக்க விருப்பப்படும் மக்கள் (18 வயதிற்கு மேல் இருக்கும் மக்கள்) வரும் 17ஆம் தேதி அதாவது நாளை நடைபெறும் விழிப்புணர்வு முகாமில் கலந்துகொள்ளலாம். தொழில்முனைவு வளர்ச்சி மற்றும் புத்தாக்க நிறுவன வளாகத்தில் (Entrepreneurship Development and Innovation Institute) தொழில் முனைவராக மாற விரும்பும் மக்களுக்காக சிறப்பு விழிப்புணர்வு முகாம் வரும் 17ஆம் தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறுகிறது.
பயிற்சியின் அம்சங்கள்
இந்த முகாமில், சொந்தமாக தொழில் தொடங்குவதில் உள்ள நன்மைகள், தொழில் வாய்ப்புகள், தொழிலை மேம்படுத்துவது எப்படி, தொழில் துவங்கவிருக்கும் முனைவோருக்கு அரசு மற்றும் பிற நிறுவனங்கள் வழங்கும் உதவிகள் மற்றும் திட்டங்கள் ஆகியவைப் பற்றி இம்முகாமில் விவரிக்கப்படும். இந்த விழிப்புணர்வு முகாமின் இறுதியில் தொழில் தொடங்க விரும்பும் நபர்களின் விவரங்கள் குறிப்பிடப்பட்டு அடுத்தகட்ட பயிற்சிக்கு வரவழைக்கப்படுவார்கள்.
2ம் கட்டப் பயிற்சி
அடுத்த கட்டமானது 3 நாள் பயிற்சியாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.திட்ட அறிக்கை தயாரித்தல், பயிற்சி மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டு அவர்களுக்கு நிதி உதவிகள் எப்படி பெற வேண்டும் என்ற ஆலோசனைகள் வழங்கப்படும்.
மேலும், மாவட்ட தொழில் மையங்களோடு இணைந்து ஐந்து நாட்களுக்கான தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சிகளும் வழங்கப்படும். இப்பயிற்சி மூலம் நிதி உதவி பெறும் திட்டங்களில் குறிப்பிட்டுள்ள கட்டாய பயிற்சியிலிருந்து விலக்கு பெறலாம். எனவே, அரசு திட்டங்கள் குறித்த விளக்கங்களும் அதன் மூலம் பயன்பெறும் வழிவகைகளும் ஏற்படுத்தித் தரப்படும்.
மேலும் படிக்க...