Blogs

Saturday, 08 January 2022 07:05 PM , by: R. Balakrishnan

Electric scooter at low price

70 ஆயிரம் ரூபாய் மதிப்பு கொண்ட ஹீரோ எலெக்ட்ரிக் ஆப்டிமா ஸ்கூட்டரை வெறும் 3500 ரூபாய் கொடுத்து நீங்கள் வாங்கிச் செல்லலாம்.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! (Electric scooter)

இந்தியாவில் இப்போது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை அதிகமாக இருக்கிறது. குறிப்பாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை நிறையப் பேர் தேர்ந்தெடுக்கின்றனர். குறைந்த விலை, சிறந்த தரம், அதிக மைலேஜ் போன்ற அம்சங்கள் வாடிக்கையாளர்களை வெகுவாக ஈர்க்கின்றன. அதற்கு ஏற்றாற்போல பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்களும் இந்தியாவில் நிறைய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்து வருகின்றன.

ஹீரோ எலெக்ட்ரிக் ஆப்டிமா (Hero Electric Optima)

ஹீரோ நிறுவனத்தின் ஆப்டிமா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. இந்த ஸ்கூட்டர் அதிகபட்சம் 25 கிலோ மீட்டர் வேகம் கொண்டது. 8 முதல் 10 மணி நேரங்களில் முழுவதுமாக சார்ஜ் ஆகிவிடும். யூஎஸ்பி சார்ஜர் போன்ற நிறைய வசதிகள் இதில் உள்ளன.

குறைந்த ஈஎம்ஐ (Low EMI)

ஹீரோ எலெக்ட்ரிக் ஆப்டிமா ஸ்கூட்டரின் சந்தை விலை ரூ.70,732. இதற்கு உங்களுக்கு ரூ.67,195 வரையில் கடன் கிடைக்கிறது. இதை வாங்குவதற்கு ஒவ்வொரு மாதமும் 2,398 ரூபாய் ஈஎம்ஐ செலுத்தினால் போதும். மொத்தம் 36 மாதங்கள் செலுத்த வேண்டும். முன்பணமாக ரூ.3,537 செலுத்தினாலே இந்த ஸ்கூட்டர் உங்களுக்கு சொந்தம். வட்டியுடன் சேர்த்து மொத்தம் நீங்கள் செலுத்த வேண்டிய தொகை ரூ.89,865. உங்களுக்கு 9.5 சதவீத வட்டியில் கடன் கிடைக்கிறது.

மேலும் படிக்க

அறிமுகமானது காற்றை நிரப்பி பயணிக்கும் சூப்பர் ஸ்கூட்டர்!

ரூ.17 லட்சம் சம்பாதிக்க LIC-யின் சூப்பர் பாலிசி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)