மின்சார வாகனங்களை தயாரிக்கும், ‘யூலர் மோட்டார்ஸ்’ நிறுவனம், மூன்று சக்கர மின்சார சரக்கு வாகனத்தை (Electric Three Wheeler) அறிமுகம் செய்துள்ளது.
மூன்று சக்கர மின்சார வாகனம்
நம் நாட்டில் இயங்கும் யூலர் மோட்டார்ஸ் நிறுவனம், மூன்று மற்றும் நான்கு சக்கர மின்சார வாகனங்களை தயாரித்து வருகிறது. இந்நிலையில், சரக்குகளை ஏற்றிச் செல்ல ஏதுவாக, ஹைலோட் ஈ.வி., எனும் மூன்று சக்கர மின்சார வாகனத்தை, இந்த நிறுவனம் அறிமுகம் செய்தது.இந்த ஹைலோட் ஈ.வி., வாகனம், கடந்த, மூன்று ஆண்டுகளாக, 10 கி.மீ., வரை இயக்கப்பட்டு பரிசோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது.
முன்பதிவு
இது, 3.5 லட்சம் ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 15ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வாகனத்திற்கான முன்பதிவு துவங்கி விட்டதாகவும், டில்லி மற்றும் குருகிராமில் உள்ள நிறுவன மையங்களுக்கு நேரில் சென்றோ அல்லது நிறுவனத்தின் இணையதள பக்கத்தின் வாயிலாகவோ, 999 ரூபாய் செலுத்தி, வாகனத்தை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு முறை ‘சார்ஜ்’ (Charge) செய்தால் 151 கி.மீ., வரை இயங்கும் வகையில், இந்த வாகனம் தயாரிக்கப்பட்டுள்ளது. 688 கிலோ வரையிலான சரக்குகளை ஏற்றிச் செல்லும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வளவு அதிக எடையிலான சரக்குகளை ஏற்றும் திறன் உடைய முதல் மூன்று சக்கர சரக்கு வாகனம் இதுவே ஆகும்.
மேலும் படிக்க