1. மற்றவை

பாம்பு வடிவில் கேக்: அசத்திய கேக் தயாரிப்பாளர்!

R. Balakrishnan
R. Balakrishnan
Snake shaped cake

அமெரிக்காவை சேர்ந்த பிரபல கேக் தயாரிப்பாளர் ஒருவர் உயிருடன் உள்ள பாம்பு போல கேக் (Snake shaped cake) ஒன்றை தயாரித்துள்ளார்.

பாம்பு வடிவ கேக்

அமெரிக்காவை சேர்ந்த பிரபல கேக் தயாரிப்பாளர் நடாலி சைட்செர்ப். இவர் மனித உருவம் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் கேக் தயாரித்து வருகிறார். இந்த கேக்குகள் தத்ரூபமாக இருப்பதால் மக்களை கவர்ந்து வருகிறது. தனது கேக் தயாரிப்புகளை நடாலி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் (Instagram Page) வெளியிட்டு வருகிறார்.

இந்தநிலையில் நடாலி சைட்செர்ப், பாம்பு வடிவில் கேக் ஒன்றை தயாரித்தார். இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அதில் மஞ்சள் நிற பாம்பு ஒன்று காட்டப்படுகிறது. திடீரென்று அதனை நடாலி ஒரு கத்தியை எடுத்து வெட்டுகிறார். அதன் பின் அது கேக் என்பதை உணர முடிகிறது.

அந்த அளவுக்கு கேக்கை உயிருடன் உள்ள பாம்பு போல நடாலி தயாரித்துள்ளார். இந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் லைக் செய்துள்ளனர்.

மேலும் படிக்க

உலகின் விலையுயர்ந்த தண்ணீர் பாட்டில்: விலையோ ரூ.44 லட்சம்!

2,400 MTC பேருந்துகளில் விரைவில் சிசிடிவி கேமரா!

English Summary: Snake shaped cake: Fantastic cake maker!

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2022 Krishi Jagran Media Group. All Rights Reserved.