சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்ற விருப்பமா? உடனடியாக விண்ணப்பியுங்கள். தகுதி 10ம் வகுப்பு மட்டுமே.
அறிவிப்பு வெளியீடு (Notice publication)
சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரடித் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ள அலுவலக உதவியாளர், சோப்தார் போன்ற பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பிற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிக்கை எண் 36/2021 14.03.2021
மொத்த காலியிடங்கள் :367
பணி மற்றும் காலியிட விவரம்
பணி: சோப்தார் - 40
பணி: அலுவலக உதவியாளர் - 310
பணி: சமையல்காரர் - வாட்டர்மேன் -1
பணி: ரூம் பாய் - 4
பணி: காவலாளி - 03
பணி: புத்தக மீட்டமைப்பாளர் - 02
பணி: நூலக உதவியாளர் - 06
ஊதியம் (Salary)
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை ஊதியமாக வழங்கப்படும்.
கல்வித்தகுதி (Education Qualification)
8ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். வீட்டு பராமரிப்பில் அனுபவம், சமைப்பதில் அனுபவம்
போன்றத் தகுதிகளைப் பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம் (Fees)
எஸ்சி, எஸ்டி (SC/ST), மாற்றுத்தினாளிகள் மற்றும் அனைத்துப் பிரிவைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. மற்ற அனைத்துப் பிரிவினரும் ரூ.500 (ஒவ்வொரு பணிக்கும்) கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி? (How to Apply)
விண்ணப்பிக்கும் ஆர்வம் உள்ளவர்கள் http://www.mhc.tn.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை
பொது எழுத்துத்தேர்வு, செய்முறைத்தேர்வு மற்றும் வாய்மொழித்தேர்வு அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பதவிக்கு
தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
கட்டணம் செலுத்தக் கடைசிநாள் (Last Date)
23.04.2021
விண்ணப்பிக்கக் கடைசி தேசி (Last Date)
21.04.2021
மேலும் படிக்க...
நிம்மதியான தூக்கத்திற்கு நாங்கள் கியாரண்டி! இரவில் யோகா செய்வதால் இத்தனை நன்மைகளா?
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பனங்கிழங்கு சாப்பிடுங்கள்!
பழுக்காத மாங்காய் ஜூஸ் குடிப்பதால், நமக்கு கிடைக்கும் பல்வேறு நன்மைகள்!