1. வாழ்வும் நலமும்

நிம்மதியான தூக்கத்திற்கு நாங்கள் கியாரண்டி! இரவில் யோகா செய்வதால் இத்தனை நன்மைகளா?

Daisy Rose Mary
Daisy Rose Mary

இரவு நேரத்தில் அமைதியான மற்றும் ஆழ்ந்த உறக்கத்தை பெற விரும்புபவர்கள், இந்த யோகாசனங்களை செய்து வந்தால் நல்ல பலன்களை பெற முடியும். நமது உடலின் உறுப்புகளின் சீரான இயக்கம், சரியான வளர்சிதை மாற்றம், உடலின் வளர்ச்சி போன்ற முக்கியமான செயல்பாடுகளுக்கு, நல்ல உறக்கம், முக்கிய காரணியாக அமைகிறது.

சுகாஷனா

  • கால்களை மடக்கிவைத்து உட்கார வேண்டும்

  • உள்ளங்கைகள் மற்றும் முழங்கால்களை மேல்நோக்கியவாறு வைத்து பிராப்தி முத்ரா நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

  • உட்காரும் போது, முதுகு நேராக இருக்குமாறு பார்த்துக்கொள்வது மிகவும் அவசியம்.

வஜ்ராசனா

  • இந்த ஆசனம், வயிற்றுப்பகுதியின் செயல்பாட்டிற்கு மிகவும் உதவுவதால், இந்த ஆசனத்தை,உணவை சாப்பிட்ட பிறகு மேற்கொள்ளுதல் நலம்.

  • முழங்கால்கள் தரையை தொடுமாறு இருக்க வேண்டும்

  • முட்டிகள் இரண்டும் ஒன்றுக்கொன்று நெருக்கமாக வைத்துக்கொண்டு அமர வேண்டும்.

     

  • இரண்டு பாதங்களின் மேற்பகுதியில் நாம் அமர்ந்து கொள்ள வேண்டும்.

  • உள்ளங்கைகள் மற்றும் முட்டிகளை மேல்நோக்கியவாறு வைத்துக்கொள்ள வேண்டும்.

     

  • முதுகுப்பகுதியை, நேராக வைத்துக்கொண்டு, உட்கார வேண்டும்.

​அத்வாசனா

  • சிறந்த உடலமைப்பை பெற இந்த ஆசனம் செய்யலாம்.

  • வயிற்றுப்பகுதியை தரை தொடும்படி வைக்க வேண்டும்.

  • உள்ளங்கைகள் கரையை நோக்கியவாறு இருத்தல் வேண்டும்

  • முன்னந்தலையும் தரையை நோக்கியவாறு இருக்க வேண்டும்.

தியானம்

  • தியானத்தை மேற்கொள்ள அமைதியான இடத்தை முதலில் தேர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

  • சுகாஷனா போன்ற ஆசன நிலையில் அமர்ந்து கொள்ள வேண்டும்

  • நேர்கொண்ட பார்வையாக 5 வினாடிகள், திரும்பிய நிலையில், 5 வினாடிகள், இடது மற்றும் வலது பார்வையாக தலா 5 வினாடிகள் என முகத்தை திருப்ப வேண்டும்.

  • பின் கண்களை மூடி, பார்த்த விஷயங்களை நம் கண்களின் மூலம், மனதில் நிலைநிறுத்த வேண்டும்.

  • இந்த தியான நடைமுறை, உங்கள் மனதை அமைதியாக இருக்க உதவுகிறது.

இதுபோன் ஆசனங்கள் மற்றும் தியானங்களின் மூலம் சிறந்த உறக்கம் நமக்கு கிடைக்கிறது. யோகானங்களை நாம் தொடர்ந்து செய்து வருவதன் மூலம், மனதை ஒருமுகப்படுத்தலாம். கவலைகளை நமது மனம் மற்றும் உடலில் இருந்து அகற்றலாம். மனச்சோர்வு மற்றும் மன அழுத்தத்தை குறைத்து நல்வாழ்வு வாழ்வோமாக...!!

மேலும் படிக்க...

யோகாவின் முக்கியத்துவம் மற்றும் யோகா செய்வதினால் உடலில் ஏற்படும் நன்மைகள்

மனஅழுத்தத்தை குறைக்கும் பத்மாசனம்!!

English Summary: All about doing yoga asana at night Published on: 12 March 2021, 06:21 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.