Blogs

Saturday, 31 July 2021 10:00 PM , by: Elavarse Sivakumar

ராக்கெட் வேகத்தில் பெட்ரோல் விலை அதிகரித்து வரும் நிலையில், மக்களின் கவனத்தை ஈக்கும் விசதமாக, மதுரையில், ஒரு தனியார் இறைச்சிக்கடையில், ஆடி மாதச் சலுகையாக, பெட்ரோல் இலவசமாக வழங்கப்படுகிறது.

லாபமே நோக்கம் (Profit is the goal)

வியாபாரத்தில், லாபமும், நஷ்டமும் இயல்பு. ஆனால் நஷ்டத்தை ஏற்க மறுக்கும் மனித மனம், லாபத்தை அதிகரிக்கவே ஆசைப்படுகிறது.

இறைச்சிக்கு பெட்ரோல் (Petrol for meat)

அந்த வகையில், இறைச்சி விற்பனையை அதிகரிக்கத் திட்டமிட்டக் கடைக்காரர் ஒருவர், பெட்ரோலை இலவசமாக வழங்கி அனைவரது கவனத்தையும் தம்பக்கம் திருப்பியுள்ளார்.

தொடங்கியது ஆடிச் சலுகை (Started Audi offer)

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தனியார் இறைச்சிக்கடையில் ஆடி மாத சலுகை விற்பனை நடைபெற்று வருகிறது.

உச்சத்தில் விலை (Price at peak)

தற்போது உள்ள கால கட்டங்களில் இறைச்சியின் விலையும் பெட்ரோல் விலையும் உச்சத்திற்கு சென்று விட்டது. இதனால், அசைவப் பிரியர்கள் இறைச்சியும் வாங்க முடியாமல், பெட்ரோலும் வாங்க முடியாமல் தவிக்கும் சூழல் உருவாகி வருகிறது.பொதுவாக ஆடி மாதம் வந்தாலே தள்ளுபடி விலைக்கு நிறுவனங்கள் பொருட்களை விற்பனை செய்வார்கள்.

பல ரகங்கள் (Many varieties)

இதனை மிஞ்சும் வகையில் மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தனியார் இறைச்சிக்கடையில் ஆடி மாத சலுகை விற்பனை நடந்து வருகிறது. திருமங்கலத்தைச் சேர்ந்தவர் சந்திரன். இவர் அதே பகுதியில் இறைச்சிக் கடை நடத்தி வருகிறார். இங்கு ஆடு, நாட்டுக் கோழி, வாத்து, முயல்,வான்கோழி, காடை, கருப்புக் கோழி, கின்னிக் கோழி என பல ரகங்களில் இறைச்சி கிடைக்கிறது.

அதிரடிச் சலுகை (Action offer)

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறைச்சிக் கடை தொடங்கியது முதல் ஒவ்வொரு முறையும் விற்பனையை விரிவுபடுத்தும் நோக்கில் 1 கிலோ இறைச்சிக்கு 6 முட்டை இலவசம், 12 முட்டை இலவசம் என பல்வேறு அதிரடிச் சலுகைகளை வழங்கி வந்தார்.

இலவசமாகப் பெட்ரோல் (Petrol for free)

இதன் தொடர்ச்சியாகத் தற்போது ஆடி மாதம் என்பதால் ஜவுளிக்கடை, வீட்டு உபயோக பொருள் விற்பனை கடைகளில் மிஞ்சும் வகையில் ஒரு கிலோ இறைச்சி வாங்குபவர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என அதிரடியாக அறிவித்து போஸ்டர் ஒட்டி திருமங்கலம் மக்களைத் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

அலைமோதும் கூட்டம் (Wandering crowd)

இதனால், இவரது இறைச்சிக்கடையில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதத் தொடங்கியுள்ளது.

மேலும் படிக்க...

டீசல் விலை உயர்வு: 3 மாநிலங்களில் 100 ரூபாயை தாண்டியது!

ஊரடங்கு எதிரொலி-டாஸ்மாக்கில் ஒயின் குடித்து ஆட்டம் போட்ட எலிகள்!

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சைக்கிள் ஓட்டி வந்த பிரேமலதா விஜயகாந்த் ஆர்ப்பாட்டம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)