1. செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சைக்கிள் ஓட்டி வந்த பிரேமலதா விஜயகாந்த் ஆர்ப்பாட்டம்!

T. Vigneshwaran
T. Vigneshwaran

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சைக்கிள் ஓட்டி வந்த பிரேமலதா விஜயகாந்த்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டிக்கும் விதமாக தேமுதிக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல் விலை ரூபாய் 100 ஐ தாண்டி விற்பனையாகி வருவதையடுத்து  பெட்ரோல் , டீசல் விலையை மத்திய , மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் தொடர்ந்து போராடி வருகின்றனர்.இந்த நிலையில் பெட்ரோல், டீசல் ,சமையல் எரிவாயு போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தை கண்டிக்கும்விதமாக தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மத்திய மாநில அரசுகளை கண்டித்து தேமுதிகவினர் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து தேமுதிக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்திற்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சைக்கிள் ஓட்டி வந்து எதிர்ப்பு தெரிவித்தார். சென்னை பாரிமுனையில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து தேமுதிக சார்பில் கலந்து கொண்ட அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா சைக்கிளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்.அவருடன் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் சைக்கிளில் அணிவகுத்து சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

போராட்டத்தின் கருத்தை வெளிப்படுத்தும் வகையில் போராட்ட பகுதிக்கு செல்வதற்கு சுமார் 500 கிலோ மீட்டர் இடைவெளியில் சைக்கிள் மூலம் அவர்கள் பயணம் செய்தனர். கொரோனா காலத்தில் ஊரடங்கை கடைபிடிக்காமல் சைக்கிள் பயணம் செய்யக்கூடாது என போலீசார் எச்சரித்த நிலையில் தேமுதிகவினர் பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல் நிலையங்களுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் வழக்கமாக 100ரூபாய்க்கு பெட்ரோல் போடுங்கள் என்று சொல்லி வருவது வழக்கம். சில்லறை இல்லாத காரணத்தால் கூறிய இந்த சொல்லை, எண்ணெய் நிறுவனங்கள் தவறாக புரிந்து கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை உயர்த்தியுள்ளார்கள் என்றே கூறலாம்.

இப்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டி இன்னும் உயர முயன்று வருகிறது, இதைப் பார்த்து சாமானிய மக்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

மேலும் படிக்க:

சதம் அடித்த பெட்ரோல் விலை-கொடைக்கானலில் ரூ.102க்கு விற்பனை!

தமிழகத்தில் நிதி நிலைமை சரியான பிறகு பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும்.

பெட்ரோல் விலை RS.125 வரை அதிகரிக்கும்- வல்லுநர்களின் கூற்று

 

English Summary: Premalatha Vijayakand protests against petrol and diesel price hike

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.