Blogs

Sunday, 07 August 2022 03:04 PM , by: Elavarse Sivakumar

ரேஷன் கார்டு மூலம், குறைந்த விலையில் மக்களுக்கு அரசால் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இனிமேல், ரேஷன் கார்டில் இலவச எல்பிஜி சிலிண்டரையும் அரசு வழங்கும்.இதனைப் பெற விண்ணப்பிப்பவரின் பெயரில் ரேஷன் கார்டு இருந்தால் போதும்.

ரேஷன் கார்டு மூலம், குறைந்த விலையில் மக்களுக்கு அரசால் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இனிமேல், ரேஷன் கார்டில் இலவச எல்பிஜி சிலிண்டரையும் அரசு வழங்கும்.இதனைப் பெற விண்ணப்பிப்பவரின் பெயரில் ரேஷன் கார்டு இருந்தால் போதும்.

நிவாரணம்

பொதுவாக பொருளாதார நிதிச்சுமையில் இருந்து பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதே இந்த திட்டங்களின் நோக்கமாகும்.

அந்த வகையில், ரேஷன் கார்டு மூலம், மக்களுக்கு அரசு மூலம் ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தற்போது பணவீக்கத்தால் அவதிப்படும் பொதுமக்களுக்கு பெரும் நிவாரணம் அளிக்கும் வகையில், ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஆண்டுதோறும் இலவச எல்பிஜி சிலிண்டர்கள் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

3 சிலிண்டர்

பொருட்களின் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள சமையலறையின் வரவு செலவுத் திட்டத்தைக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், தகுதியான நபர்கள் ஒரு வருடத்தில் 3 கேஸ் சிலிண்டர்களை இலவசமாகப் பெறலாம்.

இந்தத் திட்டத்தின்படி அந்த்யோதயா அட்டை வைத்திருப்பவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மூன்று இலவச எல்பிஜி சிலிண்டர்கள் வழங்க உத்தரகாண்ட் அரசு முடிவு செய்துள்ளது. இலவச எல்பிஜி கேஸ் சிலிண்டர் திட்டத்துக்கான மொத்த சுமை ரூ.55 கோடியை மாநில அரசே ஏற்கும். இந்த முடிவால் லட்சக்கணக்கான அந்த்யோதயா அட்டைதாரர்கள் பயனடைவார்கள். இந்த திட்டம் உத்தரகண்ட் அரசு மூலம் தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நிபந்தனைகள்

  • பயனாளி உத்தரகண்ட் மாநிலத்தில் வசிப்பவராக இருப்பது கட்டாயமாகும்.

  • தகுதியான பயனாளி அந்தியோதயா ரேஷன் கார்டு வைத்திருப்பவராக இருக்க வேண்டும்.

  • அந்தியோதயா ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் எரிவாயு இணைப்பு அட்டையுடன் லிங்க் செய்யப்பட வேண்டும்.

மேலும் படிக்க...

விடாது துரத்தும் காகங்கள்- தலையில் கொத்துவதால் அலறும் பெண்மணி!

கத்திரிக்காயை பச்சையாக கடித்துக் காண்பித்த பெண் எம்.பி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)