Blogs

Wednesday, 23 December 2020 10:15 AM , by: Elavarse Sivakumar

Credit : The Economic Times

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள ரூ.1 லட்சம் வரையிலான ஊதியம் கொண்ட பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி  (Job)

பணிப்பார்வையாளர், இளநிலை வரைதொழில் அலுவலர்

காலியிடங்கள் (Vacancies)

08

சம்பளம் (Salary)

மாதம் ரூ.35,400 - ரூ.1,12,400 வரை

வயதுவரம்பு(Age Limit)

01.07.2020 ஆம் தேதியின்படி 35 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.

தகுதி (Qualification)

பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ அல்லது பிஇ (Diploma or B.E.)முடித்திருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை  (Selection)

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிப்பது எப்படி? (How to apply)

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://kanchi.tn.nic.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி நாள் (Last Date)

07.01.2021

விண்ணப்பப் படிவத்தினைப் பெறுவதற்கு
https://cdn.s3waas.gov.in/s31543843a4723ed2ab08e18053ae6dc5b/uploads/2020/12/2020120871.pdfஎன்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

மேலும் படிக்க...

அரசு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் பணி- ரூ.1 லட்சத்திற்கும் மேல் ஊதியம்!

வறுமையை ஒழித்துக் கிராமங்களை வளமாக்கும் MGNREGA !!

டெல்லியில் போராடும் விவசாயிகள் - NDA தலைவர்களைச் சந்திக்க முடிவு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)