பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 17 August, 2022 8:46 AM IST

அஞ்சலகத்தில் பிக்ஸட் டெபாசிட் கணக்குக்கான வட்டி விகிதத்தை நிர்ணயிக்கும் விதிகளில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, மத்திய அரசு பிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கு ஒரு ஆண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரையிலான கால அவகாசத்துடன் வட்டி விகிதங்களை வழங்குகிறது

மக்களின் நம்பிக்கை

மத்திய அரசின் நிறுவனம் என்பதால், கிராமப்புற மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்கிறது அஞ்சல சேமிப்பு மற்றும் டெபாசிட் தட்டங்கள்.
அதுமட்டுமல்லாமல், மற்ற நிதி நிறுவனங்களை காட்டிலும் அரசின் அஞ்சல் அலுவலகத்தில் எஃப்டியில் முதலீடு செய்வது பலவிதமான நன்மைகளையும், உங்கள் பணத்திற்கு பாதுகாப்பையும் தருகிறது.

நன்மைகள்

  • அஞ்சல் அலுவலகத்தின் எஃப்டியில் முதலீடு செய்வதன் முக்கியமான நன்மை என்னவென்றால் உங்களுக்கு வருமானத்துடன் அரசாங்க உத்தரவாதமும் கிடைக்கிறது.

  • இதில் காலாண்டு அடிப்படையில் வட்டியை பெற்றுக்கொள்ளலாம். ஒன்று, இரண்டு, மூன்று அல்லது 5 ஆண்டுகள் என உங்கள் விருப்பப்படி பல்வேறு பதவிக் காலங்களுக்கு அஞ்சல் அலுவலகத்தில் எஃப்டியில் முதலீடு செய்துகொள்ளலாம், மேலும் இதில் முதலீடு செய்வதும் எளிதான ஒன்றாகும்.

  • 1 வருடத்திற்கு 5.50% வட்டி விகிதம், 2 வருடத்திற்கு 5.50% வட்டியும் கிடைக்கிறது.

  • அஞ்சல் அலுவலகத்தில் எஃப்டி கணக்கை திறந்தால் வருமான வரிச் சலுகைகளைப் பெறலாம்.

விதிகளில் மாற்றம்

இந்நிலையில் இந்திய அஞ்சல் துறை, தகவல் தொடர்பு அமைச்சகம், இந்திய அரசு பிக்ஸட் டெபாசிட் கணக்குகளுக்கு ஒரு ஆண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரையிலான கால அவகாசத்துடன் சிறப்பான வட்டி விகிதங்களில் மாற்றங்களைப் புகுத்தியுள்ளது.

வட்டி

இதன்படி இதில் குறைந்தபட்ச வைப்புத் தொகை ரூ 1,000 மற்றும் அதிகபட்ச வரம்பு இல்லாமல் ஆண்டுதோறும் வட்டி செலுத்தப்படும். 1 வருடத்திற்கு 5.50% வட்டி விகிதம், 2 வருடத்திற்கு 5.50% வட்டி விகிதம், 3 வருடத்திற்கு 5.50% வட்டி விகிதம், 5 வருடத்திற்கு 6.70% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.

சலுகை

நீங்கள் 5 வருட காலத்திற்கு அஞ்சல் அலுவலகத்தில் எஃப்டி கணக்கை திறந்தால், வருமான வரிச் சட்டம், 1961-ன் பிரிவு 80C-ன் கீழ் வரிச் சலுகைகளைப் பெறலாம். அஞ்சல் அலுவலகத்தின் எஃப்டி கணக்கில் ஒரு வயது வந்தவர், அதிகபட்சம் மூன்று பெரியவர்கள் (கூட்டு கணக்காக இருந்தால்), 10 வயதுக்கு மேற்பட்ட மைனர், மைனர் அல்லது மனநிலை சரியில்லாத நபர்களுக்கு பாதுகாவலர் போன்ற யாரேனும் இந்த கணக்கை தொடங்கிக்கொள்ளலாம். சமீபத்தில் பல தனியார் வங்கிகளும் பிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...

தேசத்தின் சிறந்த முதல்வர்கள் பட்டியல் - 3ம் இடத்தில் மு.க.ஸ்டாலின்!

ஆதரவற்றப் பெண்களின் திருமணத்துக்கு ரூ.50,000 நிதியுதவி!

English Summary: Have you invested in postal FD account? A change in the rules!
Published on: 17 August 2022, 08:46 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now