Blogs

Thursday, 30 September 2021 06:29 AM , by: Elavarse Sivakumar

பண்டிகைக் காலங்கள் வரும்போதுதான், மக்கள் கையில் காசு புரளும். இதனைக் கருத்தில்கொண்டு, வங்கிகளும், பலவிதக் கடன் சலுகைகளை அறிவித்து, வாடிக்கையாளர்களைக் கவர முயற்சி மேற்கொள்ளும்.

பண்டிகைக் காலம் (Festive season)

அந்த வகையில் தற்போது, வீட்டுக்கடன் பெறுவோருக்கு வங்கிகள் பலவித சலுகைகளையும், தள்ளுபடிகளையும் வழங்கியுள்ளன. பல வங்கிகள் மற்றும் வீட்டு வசதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை கவரச் சிறப்புச் சலுகைகளை கொண்டு வருகின்றன. இந்த ஆண்டின் பண்டிகை காலம் இப்போது தொடங்க உள்ளது.

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான இந்திய ஸ்டேட் வங்கி (SBI) புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

SBI அளிக்கும் சலுகை 

வங்கி, வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தை (Rate Of Interest) 6.70% ஆக நிர்ணயித்துள்ளது. இதனுடன், வாடிக்கையாளர்களுக்கு விதிக்கப்படும் செயலாக்க கட்டணமும் தள்ளுபடி செய்யப்படும் என வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தவிர, ஊதியம் பெறாத (Non Salaried) வாடிக்கையாளர்களுக்கு வட்டி பிரீமியத்தில் கூடுதல் தள்ளுபடி வழங்கப்படும்.

HDFC வங்கி

  • தனியார் வங்கியான எச்டிஎப்சி-யும் (HDFC) இந்த பண்டிகைக் காலத்தில் வீட்டுக் கடன்களை மலிவாக வழங்க முடிவு செய்துள்ளது. வங்கி வீட்டுக் கடன் வட்டி விகிதத்தை 6.7% ஆக நிர்ணயித்துள்ளது.

  • இதனுடன், வாடிக்கையாளர்களுக்கு கிரெடிட் ஸ்கோரின் அடிப்படையில் சில தள்ளுபடியும் வழங்கப்படும்.

இந்தியன் வங்கி 

  • அரசு வங்கிகளில், இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு வீட்டுக்கடனில் கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்கி வருகிறது.

  • இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு 6.85%-8.00% வட்டி விகிதத்தில் கடன் வழங்கும்.

  • இதனுடன் 22 முதல் 25 ஆயிரம் ரூபாய் இஎம்ஐ-யில் 20 ஆயிரம் செயலாக்க கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும்.

ஆக்சிஸ் வங்கி

ஆக்சிஸ் வங்கியின் வட்டி விகிதம் 6.90% -8.40% ஆக உள்ளது. 23 முதல் 25 ஆயிரம் இஎம்ஐ மீது அதிகபட்சமாக ரூ .10,000 செயலாக்க கட்டணம் வசூலிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

பேங்க் ஆஃப் பரோடா

 பேங்க் ஆஃப் பரோடாவின் (Bank of Baroda) வட்டி விவகிதம் 6.75%-8.60% ஆகும். இந்த வங்கியில் 22 முதல் 26 ஆயிரம் வரையிலான தொகையின் இஎம்ஐ-யில் அதிகபட்சமாக 25 ஆயிரம் ரூபாய் செயலாக்க கட்டணம் வசூலிக்கப்படும்.

LIC Housing Finance

எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் (LIC Housing Finance ) தனது வாடிக்கையாளர்களுக்கு பல கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்கி வருகிறது. இங்கு வாடிக்கையாளர்களுக்கு 6.90% வட்டி விகிதத்தில் கடன் கிடைக்கிறது. இங்கு, வீடு கட்டுவதற்கு, வீடு வாங்குவதற்கு, மனை வாங்குவதற்கும் மற்றும் வீட்டை பழுதுபார்க்கவும் வீட்டுக் கடன் வழங்கப்படுகிறது. இந்த கடனில் பெண் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன.

கோடக் மஹிந்திரா வங்கி

கோடக் மஹிந்திரா வங்கி 6.5% வட்டி விகிதத்தில் வட்டி வழங்குகிறது. வங்கி அதன் வட்டி விகிதத்தில் 0.15 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது.

மேலும் படிக்க...

ரூ.1800க்கு விற்பனையாகும் வேப்பங்குச்சி- அமெரிக்காவில் நடக்குது இந்தக் கொடுமை!

துவரை நடவு செய்ய ரூ.5700 மானியம்- வேளாண்துறை அழைப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)