1. தோட்டக்கலை

துவரை நடவு செய்ய ரூ.5700 மானியம்- வேளாண்துறை அழைப்பு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Rs.5700 subsidy for planting turmeric - Department of Agriculture calls!

சேலம் மாவட்டத்தில் துவரையை நடவு செய்ய முன்வரும் விவசாயிகளுக்கு, ஹக்டேருக்கு ரூ.5700 வரை மானியம் வழங்கப்பட உள்ளதாக வேளாண் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பருப்பு வகைகள் சாகுபடி (Cultivation of pulses)

சேலம் மாவட்டம் ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் ஆகிய வட்டார கிராமங்களில் நிலம் சீதோஷணநிலை, பருப்பு சாகுபடிக்கு ஏற்றது.

இதனைக் கருத்தில்கொண்டு, விவசாயிகள் பருப்பு வகைகளை அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.

மத்திய, மாநில அரசுகள் மானியம் (Grant by Central and State Governments)

இந்நிலையில், துவரை பருப்பு சாகுபடி பரப்பை அதிகரிக்க தற்போது தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.அதன்படி தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் மூலம் நடப்பாண்டு துவரை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்குத் தமிழக அரசு, ஒரு ஹக்டேருக்கு 2,500 ரூபாய் மானியம் வீதம், 600 ஹக்டேருக்கு வழங்கப்படுகிறது.

அதேபோல தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் ஒரு ஹக்டேருக்கு 3,200 ரூபாய் வீதம் 100 ஹக்டேருக்கு மானியம் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது.

மானியத்தில் விதைகள் (Seeds in subsidy)

அதனால், விவசாயிகள் அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி, துவரை விதைகளை 50 சதவீத மானியத்தில் பெற்றுப் பயனடையலாம். இவ்வாறு வேளாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க...

இனி உங்களுக்கு ரேஷன் பொருள்கள் பெறுவதில் சிக்கல்- அரசின் விதிகளில் மாற்றம்!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் பதில்!

English Summary: Rs.5700 subsidy for planting turmeric - Department of Agriculture calls!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2022 Krishi Jagran Media Group. All Rights Reserved.