நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 12 November, 2022 8:53 AM IST
PF Nomination

முதலீடுகளுக்கான நியமனம் அதாவது நாமிநேசன் (nomination) ஏன் முக்கியமானது என்றால் முதலீடுகள் அதிக சிரமமின்றி நாமினிக்கு அனுப்பப்படுவதை உறுதி செய்வதற்காகத்தான். முதலீடு செய்யும் போது, குறிப்பாக ஒரே பெயரிலிருந்தால், நியமனத்தைப் பதிவு செய்வது முக்கியம். இல்லையெனில் சட்டப்பூர்வமா வாரிசுகள் முதலீட்டை அணுகுவது மிகவும் சிரமமாக இருக்கும்.

நாமினியை சேர்ப்பது எப்படி?

முதலீட்டின் போது நாமினேசன் குறிப்பிடப் வேண்டும். மாற்றாக, முதலீட்டாளர் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து பின்னர் கூட சமர்ப்பிக்கலாம். பெரும்பாலான முதலீடுகள் பல பரிந்துரைகளை அனுமதிக்கின்றன, இதில் முதலீட்டாளர் ஒவ்வொரு நாமினிக்கும் முதலீட்டின் சதவீதத்தைக் குறிப்பிடலாம்.

நாமினேசன் (Nomination) யாரால் பதிவு செய்ய முடியும் அதற்கு தகுதியானவர்கள் யார்?

தனிப்பட்ட முதலீட்டாளர்கள் மட்டுமே தங்கள் முதலீட்டிற்கு பரிந்துரை செய்ய முடியும். HUF அல்லது பவர் ஆஃப் அட்டர்னி ஹோல்டரின் கார்ட்டாவை நாமினியாக பரிந்துரைக்க முடியாது. ஒரு தனிநபர்-குடும்ப உறுப்பினர், உறவினர் மற்றும் நண்பர்-நாமினியாக நியமிக்கப்படலாம். காப்பீட்டு பாலிசிகளில், நாமினிக்கு உறவினர் இல்லை என்றால், பாலிசிதாரர் நாமினியின் காப்பீட்டுக்கான பயனை யாருக்குச் செலுத்துவது என்பதை நிரூபிக்க வேண்டும்.

18 வயக்குக்குக் குறைந்த நபரை நாமினியாக வைக்க முடியுமா?

ஒரு மைனர் அவரது பிறந்த தேதி மற்றும் அவரது சட்டப்பூர்வமா பாதுகாவலரின் பெயர் மற்றும் முகவரியை வழங்கிய பிறகு உங்கள் முதலீடுகள், பாலிசிகளில் நாமினியாக பரிந்துரைக்கப்படலாம்.

நாமினியின் பெயரை மாற்றுவது எப்படி?

நீங்கள் நாமினியாக சேர்க்கப்பட்ட நபரின் பெயரை மாற்றக் கீழுள்ள படிவங்களை சமர்ப்பித்து மாற்றிக் கொள்ளலாம்.

  1. இண்டெமினிட்டி சூரிட்டி மற்றும் கேரண்டி படிவம் (Indemnity letter supported by guarantee of an independent surety)
  2. முத்திரைத் தாள் உறுதிமொழியுடன் (Affidavit made on stamp paper)
  3. NOC படிவம் (NOC from all legal heirs)

நாமினேசன் சமயத்தில் கவனத்தில் கொள்ள வேண்டியவை:

  1. ஆகஸ்ட் 2022 முதல் மியூச்சுவல் ஃபண்ட் யூனிட் ஹோல்டர்கள் அவர்களின் நாமினிகளை பதிவு செய்ய வேண்டும் அல்லது வேட்புமனுவிலிருந்து விலகு வேண்டும் எனச் செபி கட்டாயமாக்கியுள்ளது.
  2. நம்பிக்கையான நபர்களை மட்டுமே நாமினியாக பரிந்துரைக்கப்பட வேண்டும். மேலும் சட்டப்பூர்வ வாரிசுகளால் முதலீடு சர்ச்சைக்குரியதாக இருந்தால், நீதிமன்றத்தின் இறுதி முடிவு நிலுவையில் இருந்தால் அந்த பரிந்துரைக்கப்பட்ட நபர்கள் சரியானவர்களாக இருந்தால் முதலீடுகளின் மீதான பயன் நேரடியாக அவர்களுக்குச் செல்லும்.
  3. மாற்றுக் கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்பட்டு வெளிநாடு வாழ் இந்தியர்களை நாமினியாக பரிந்துரைக்கலாம்.

மேலும் படிக்க

மாதம் ரூ.64,000 பென்சன்: இந்த திட்டத்தில் பயன்பெறுவது எப்படி?

அதிக வட்டி தரும் அரசு வங்கிகள்: இலாப மழை பொழியும் பிக்சட் டெபாசிட் திட்டங்கள்!

English Summary: How to Nominate Investments and PF? What is its necessity?
Published on: 12 November 2022, 08:53 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now