1. மற்றவை

அதிக வட்டி தரும் அரசு வங்கிகள்: இலாப மழை பொழியும் பிக்சட் டெபாசிட் திட்டங்கள்!

R. Balakrishnan
R. Balakrishnan
High profit Fixed Deposit Shemes

ஃபிக்சட் டெபாசிட்கள் மக்கள் மத்தியில் பாதுகாப்பான மற்றும் வருமானம் தரக்கூடிய முதலீடாக கருதப்படுகிறது. எனவே தான் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களை கவர்வதற்காக அவ்வப்போது பிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்களில் மாற்றங்களை செய்து வருகின்றன. தற்போது பொதுத்துறை வங்கியான பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி (PSB) அதிக வட்டி வருமானம் தரக்கூடிய 5 ஸ்பெஷலான ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

பண்டிகை காலங்கள் போன்ற சிறப்பு நாட்களுக்காக பிஎஸ்பி ஸ்பெஷல் ரேட் (SRSD-1051), பிஎஸ்பி தி பவர் ஆப் 400 டேஸ் மற்றும் பிஎஸ்பி இன்வெஸ்ட்மென்ட் பிளஸ் 501 டேஸ், பிஎஸ்பி ஃபேபுலஸ் 300 டேஸ், பிஎஸ்பி ஃபேபுலஸ் 601 டேஸ் என 5 வெவ்வேறு வகையான ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

பிஎஸ்பி ஸ்பெஷல் ரேட் (SRSD-1051)

சிறப்பு நாட்களாக பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி அறிமுகப்படுத்திய இந்த பிக்சட் டெபாசிட் திட்டமானது 1,051 நாட்கள் கால அவகாசம் கொண்டதாகும். இந்த திட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் இணையலாம். பிஎஸ்பி ஸ்பெஷல் ரேட் திட்டத்தில் டெபாசிட் செய்யப்பட்டக்கூடிய பணத்திற்கு டெர்ம் டெபாசிட்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதங்களை விட 25 அடிப்படை புள்ளிகள் அதிகமாக வழங்கப்படுகிறது. இந்த கணக்கை தனிநபராகவோ அல்லது கூட்டாகவோ தொடங்கலாம். பவர் ஆஃப் அட்டர்னி மூலம் கணக்கை நிர்வாகிக்கும் வசதியும் உள்ளது. இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 25 ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சமாக 15 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். 5 ஆயிரம் ரூபாயைக் கொண்டு பிஎஸ்பி ஸ்பெஷல் ரேட் கணக்கை திறக்கலாம்.

பிஎஸ்பி தி பவர் ஆப் 400 டேஸ்

400 நாட்கள் முதிர்வு காலத்தை மட்டுமே கொண்ட இந்த சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டத்தில் சேருவதற்கான கால அவகாசம் டிசம்பர் 31, 2022 உடன் நிறைவடைகிறது. பஞ்சாப் & சிந்து வங்கி இந்த சிறப்பு திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 5.80 சதவீத வட்டியையும், மூத்த குடிமக்களுக்கு கூடுதல் வட்டியையும் வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் அக்கவுண்ட்டை ஆரம்பிக்க குறைந்தபட்ச வைப்புத்தொகை ரூ.25 ஆயிரம் ஆகும். அதிகபட்சமாக 15 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்யலாம். பிஎஸ்பி 400 டேஸ் சிறப்பு FD திட்டமானது தானாக புதுப்பித்தல் மற்றும் நியமன வசதியுடன் வருகிறது.

பிஎஸ்பி இன்வெஸ்ட்மென்ட் பிளஸ்-501 நாட்கள்

501 நாட்கள் மட்டுமே முதிர்வு காலத்தைக் கொண்ட “பிஎஸ்பி இன்வெஸ்ட்மென்ட் பிளஸ்-501 நாட்கள்" என்ற சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டத்தில் இணைய டிசம்பர் 1, 2022 வரை மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மக்களுக்கு 6.10 சதவீத வட்டியும், மூத்த குடிமக்களுக்கு அதைவிட அதிகமான வட்டியும் வழங்கப்படுகிறது. இந்த சிறப்பு ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தை திறக்க, குறைந்தபட்சம் 5 ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்ச வரம்பு 1.99 கோடி ரூபாய் வரை டெபாசிட் செய்யலாம்.

பிஎஸ்பி ஃபேபுலஸ் 300 டேஸ்

300 நாட்கள் முதிர்வு காலத்தைக் கொண்ட சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டமானது 2023, மார்ச் 31ம் தேதி வரை மட்டுமே அமலில் இருக்கும் என பிஎஸ்பி வங்கி அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஓராண்டுக்கு மக்களுக்கு 5.25 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு 5.75 சதவீதமும், சூப்பர் சீனியர் சிட்டிசன்களுக்கு 6.10 சதவீதமும் வட்டியாக வழங்கப்படும். “சூப்பர் சீனியர் சிட்டிசன்” ன்பது "80 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய நபர்களை குறிப்பதாகவும், அவர்களுக்கு பிறரை விடவும் 35 அடிப்படை புள்ளிகள் வரை அதிக வட்டி வழங்கப்படும் என்றும் பிஎஸ்பி தெரிவித்துள்ளது.

பிஎஸ்பி ஃபேபுலஸ் பிளஸ் 601 டேஸ்

601 நாட்கள் முதிர்வு காலத்தைக் கொண்ட சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டமானது 2023, மார்ச் 31ம் தேதி வரை மட்டுமே அமலில் இருக்கும் என பிஎஸ்பி வங்கி அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஓராண்டுக்கு பொது மக்களுக்கு 7 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு 7.50 சதவீதமும், சூப்பர் சீனியர் சிட்டிசன்களுக்கு 7.85 சதவீதமும் வட்டியாக வழங்கப்படும்.

மேலும் படிக்க

பென்சன் வாங்குவோருக்கு புதிய சேவை: இனி இது போதுமே!

பிக்சட் டெபாசிட்டை விட அதிக இலாபம் தரும் திட்டம் இதுதான்!

English Summary: Government banks that give high interest: Profit raining fixed deposit schemes! Published on: 10 November 2022, 10:51 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.