வேளாண் மற்றும் அதைச்சார்ந்த துறைகளில் வேலை தேடுபவர்களுக்கு இங்கே ஒரு நற்செய்தி காத்திருக்கிறது. பல்வேறு வங்கிகளில் காலியாக உள்ள வேளாண் கள அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வங்கிப் பணிகளை பூர்த்தி செய்யும் வங்கிப் பணியாளர்கள் தேர்வாணையம் (IBBS) இந்த வேலைவாப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் காலியாக உள்ள 485 வேளான் கள அலுவலர் பணியிடங்களுக்கு தகுதியான மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி குறித்து முக்கிய தேதிகள்
-
ஆன்லைனில் பதிவு செய்ய - நவம்பர் 23ம் தேதி கடைசி நாள்
-
முதல்நிலை ஆயத்தத்தேர்வு (ஆன்லைன்) - டிசம்பர் 26 மற்றும் 27ம் தேதிகளில் நடைபெறும்
-
ஆயத்தத்த தேர்வு முடிவுகள் ஜனவரி 2021ல் அறிவிக்கப்படும்
-
ஆன்லைன் முதன்மைத் தேர்வு - ஜனவரி 24ம் தேதி நடைபெறும்
-
முதன்மைத் தேர்வு முடிவுகள் - பிப்ரவரி மாதம் அறிவிக்கப்படும்
-
நேர்முகத் தேர்வு - பிப்ரவரி மாதம் நடைபெறும்
-
பணி ஆணை ஏப்ரல் 2021ல் வழங்கப்படும்
பணி விபரம்
-
பணி - வேளாண் கள அலுவலர் (Scale -1)
-
மொத்த பணியிடங்கள் - 485
-
வயது வரம்பு - 20 - 30 வரை
கல்வித் தகுதி
-
வேளாண்துறையில் 4 ஆண்டு பட்டயப்படிப்பு படித்திருக்க வேண்டும்
-
வேளாண் சார்ந்த தோட்டக்கலைத்துறை, கால்நடைத்துறை, உணவுத்துறை, பாள்வளத்துறை, கூட்டுறவுத்துறை, சந்தைப்படுத்தல் துறை போன்ற வேளாண்துறையில் 4 ஆண்டு பட்டயப்படிப்பு படித்திருக்க வேண்டும்
சம்பளம்
அடிப்படை ஊதியம் - ரூ.23,700 முதல் 42,020 வரை
விண்ணப்பிப்பது எப்படி?
-
பணிக்கு விண்ணபிப்பவர்கள் www.ibps.in இணையளத்திற்கு செல்லவும்.
-
அங்கிருக்கும் நோட்டிஃபிகேஷன் பகுதியில் தெரியும் ''CRP Specialist Officers” தேர்வு செய்து “CLICK HERE TO APPLY ONLINE கிளிக் செய்யவும்.
-
இந்த பகுதியில் கேட்கப்படும் உங்களுடைய சுய விபரங்கள் குறித்த தகவல்களைப் பதிவிடவும்.
-
கவனத்துடன் பூர்த்தி செய்த இந்த ஆன்லைன் படிவத்தை சேமித்து சமர்ப்பிக்கவும்.
-
விருப்பமுடைய தேர்வர்கள் இப்போதே நேரடியாக விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்.
தேர்வு முறை
-
ஆன்லைன் தேர்வுகள்
-
முதல்நிலை ஆயத்த தேர்வு (ஆங்கிலம், பகுத்தறிவு & திறனறிவு கேள்விகள்)
-
முதன்மைத் தேர்வு (தொழில்சார்ந்த திறன்றிவு கேள்கள் (60 மதிப்பெண்களுக்கு)
நேர்முகத்தேர்வு
-
பணி ஆணை வழங்கள்
மேலும் படிக்க...