பீகாரில் ஒரே கணவனுக்கு 2 மனைவிகள் இருந்த இருந்த நிலையில் இருவரும் கணவனை பிரித்துக்கொண்ட சம்பவம் வைரலாக பரவி வருகிறது. மாதத்தில் 15 நாட்கள் தங்களுக்கு என 2 மனைவிகளும பங்கு போட்டுக்கொண்டனர். இதற்கென அவர்கள் 3 பேரும் ஒப்பந்தம் போட்டிருப்பது வியப்பின் உச்சம்.
குடும்ப பிரச்சனை காரணமாக ஒரு வீட்டை இரண்டாக பிரித்து கேள்விபட்டிருப்பீர்கள், அல்லது நிலம், சொத்து பல விஷயங்களை பாகம் பிரித்து பார்த்திருப்போம். ஆனால் இங்கு கணவரை இரண்டு மனைவிகள் பாகம் பிரித்து கொண்டிருக்கிறார்கள். இந்த சம்பவம், சமீபத்தில் பீகார் மாநிலத்தில் நடந்துள்ளது.
பீகார் மாநிலம் பூர்ணியா மாவட்டம் பவானிப்பூரை அடுத்த கோத்யாரி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்படி அவருக்கு சமீபத்தில் ஒரு நபருடன் திருமணமாகியுள்ளது. திருமணமான சில நாட்கள் கழித்து தான் அவருக்கு தன் கணவருக்கு ஏற்கனவே திருமணமாகி 6 குழந்தைகள் இருப்பது தெரியவ்நதது. இந்நிலையில் அவர் தனது முதல் மனைவியுடன் சென்று வாழ்ந்துள்ளார்.
இந்நிலையில் இரண்டாவது மனைவி கணவனை தன்னுடன் வந்து வாழ வைக்க வேண்டும் என போலீசில் மனு அளித்தார். இதையடுத்து போலீசார் கணவன் மற்றும் இரண்டு மனைவிகளையும் அழைத்து விசாரணை நடத்தினர். அப்பொழுது இரண்டு மனைவிகளும் கணவர் தன்னுடன்தான் வாழ வேண்டும் என கூறினர்.
இதையடுத்து போலீசார் ஒரு வித்தியாசமான முடிவை எடுத்தனர் கணவர் மாதத்தின் முதல் 15 நாட்கள் முதல் மனைவியுடனும் அடுத்த 15 நாட்கள் இரண்டாவது மனைவியுடனும் வாழ வேண்டும் என கூறினர்.மேலும் இரு மனைவிக்கும், கணவர் தான் சம்பாதிக்கும் பணத்தை பகிர்ந்தளிக்க வேண்டும் என கூறினர். இதற்கு இரு மனைவிகளும் சம்மதித்த நிலையில் தற்போது இவர் மாதத்தில் பாதிநாள் முதல் மனைவி வீட்டிலும் பாதிநாள் இரண்டாவது மனைவி வீட்டிலும் வாழ்கிறார்.
இதற்காக காவல் நிலையத்திலேயே ஒரு ஒப்பந்தம் எழுத 3 பேரும் கையெழுத்து போட்டுள்ளனர். வருகாலத்தில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் சட்ட ரீதியாக இதை எதிர்கொள்ள இந்த ஒப்பந்தம் உதவுமாம். இந்த செய்தி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மேலும் படிக்க...