ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வாடிக்கையாளர்கள் ரூ.35 லட்சம் வரையில் கடன் பெறும் சிறப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தகுந்த நேரத்தில் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக்கொண்டால், அதிகளவில் பலன் அடையலாம்.
இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருவதோடு, அவ்வப்போது சிறப்புத் திட்டங்களையும் அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது ’ரியல் டைம் எக்ஸ்பிரஸ் கிரெடிட்’ (RTXC) என்ற சலுகைத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் கடன்
இந்தத் திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட வாடிக்கையாளர்கள் வங்கிக் கிளைக்குச் செல்லாமலேயே ஆன்லைன் மூலமாகக் கடன் வாங்கிக் கொள்ளலாம்.
பேப்பர்லெஸ் முறையிலேயே இக்கடனுக்கான செயல்முறைகள் அனைத்தும் முடிக்கப்படும். இத்திட்டத்தின் கீழ், மத்திய அரசு, மாநில அரசு ராணுவத் துறையில் சம்பளம் பெறும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வாடிக்கையாளர்கள் பயன்பெறலாம்.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் சம்பளக் கணக்கு வைத்திருக்கும் மேற்கூறிய வாடிக்கையாளர்களுக்கே இச்சலுகை பொருந்தும். அவர்களுக்கு ரூ.35 லட்சம் வரை கடன் வழங்கப்படும். இக்கடன் முழுக்க முழுக்க ஆன்லைன் முறையிலேயே செயல்படுத்தப்பட்டு வழங்கப்படுகிறது.
இக்கடனுக்கான செயல்பாட்டுக் கட்டணம் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
காகிதமில்லா நடைமுறை
இதுகுறித்து ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் தலைவர் தினேஷ் காரா கூறுகையில், எங்களது வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் முறையிலான வங்கிச் சேவைகளை சிறப்பாக வழங்கும் நோக்கத்தில் இத்திட்டத்தை செயல்படுத்துகிறோம். இது முழுக்க முழுக்க காகிதமில்லா நடைமுறையில் உடனடியாக டிஜிட்டல் முறையில் கடன் வழங்கும் திட்டமாகும். வாடிக்கையாளர் அனுபவத்தை சிறப்பாக்கும் வகையில் இத்திட்டம் இருக்கும் என்றார்.
மேலும் படிக்க...
ரூ.1லட்சம் பென்சன் தரும் மத்திய அரசின் மகத்தானத் திட்டம்!
Indian Air Forceஸில் வேலை - பிளஸ் 2 படித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு!