சம்பாதித்த பணத்தை மிச்சமில்லாமல் செலவழிக்க விரும்புபவர்களுக்கும், இந்தக் கொரோனா வைரஸ் சரியானப் பாடத்தைப் புகட்டியிருக்கிறது.
சூப்பர் திட்டம் (Super project)
அந்தப் பாடத்தைப் புரிந்துகொண்டவரா நீங்கள்? உங்களுக்கான உள்ள ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. அதற்குதான் உள்ளது, ஒவ்வொரு மாதமும் 1,000 ரூபாயை சேமித்து 26 லட்சம் சம்பாதிக்கும் அருமையான திட்டம்.
PPF
சேமிப்பது சிறியத் தொகையாக இருந்தாலும் நீண்ட கால அடிப்படையில் மிகப் பல கோடிகளில் லாபம் ஈட்டலாம் என்பது உறுதி. சிறுத் துளி பெரு வெள்ளம் என்பது போல, சிறிய தொகையாக இருந்தாலும் இடை விடாமல் தொடர்ந்து சேமித்தால் பெரிய லாபம் நிச்சயம். அப்படிப்பட்ட ஒரு திட்டம் தான் இது.
ஓய்வெடுக்க உதவும் (To help relax)
பொது வருங்கால வைப்பு நிதி. 1968ஆம் ஆண்டில் தேசிய சேமிப்பு நிறுவனத்தால் இத்திட்டம் முதன்முதலில் தொடங்கப்பட்டது. முதலீட்டுக் காலத்தை நீங்கள் தேர்வுசெய்து தொடர்ந்து சேமித்தால் உங்களது ஓய்வுக் காலத்தில் பெரிய தொகை கையில் இருக்கும்.
ரூ.26 லட்சம் கிடைக்கும் (Rs.26 lakh will be available)
பொது வருங்கால வைப்பு நிதித் திட்டத்தில் நீங்கள் ஒவ்வொரு மாதமும் 1,000 ரூபாய் சேமித்தாலே ரூ.26 லட்சம் வரையில் உங்களுக்குக் கிடைக்கும்.
வட்டி அதிகம் (The interest is high)
பொது வருங்கால வைப்பு நிதித் திட்டத்தில் தற்போது ஆண்டுக்கு 7.1 சதவீத வட்டி லாபம் கிடைக்கிறது.
குறைந்தபட்ச சேமிப்பு (Minimum storage)
இத்திட்டத்தில் நீங்கள் ஆண்டுக்கு குறைந்தது 500 ரூபாய் முதல் அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரையில் சேமிக்கலாம்.
12 பரிவர்த்தனை (12 transaction
மொத்தம் 12 பரிவர்த்தனைகளில் சேமிப்புப் பணம் டெபாசிட் செய்யப்பட வேண்டும். இத்திட்டத்தில் நீங்கள் 15 ஆண்டுகளுக்கு சேமிக்கலாம். அதன் பின்னர் உங்களது சேமிப்புப் பணம் முழுவதையும் எடுத்துவிடலாம்.
மேலும் நீட்டிக்கும் வாய்ப்பு (Opportunity to extend further)
நீங்கள் விரும்பினால், அல்லது தேவைப்பட்டால், மேலும் 5 ஆண்டுகளுக்கு இத்திட்டத்தை நீங்கள் நீட்டித்துக்கொள்ளக்கூடிய வசதியும் உண்டு.
வட்டி மட்டும் ரூ.1.45 லட்சம் (1.45 lakh interest only)
நீங்கள் ஒவ்வொரு மாதமும் 1,000 ரூபாய் என மொத்தம் 15 ஆண்டுகளுக்கு சேமித்தால் உங்களது டெபாசிட் தொகை மொத்தம் ரூ.1.80 லட்சம் மட்டுமே. ஆனால் உங்களுக்குக் கிடைப்பது ரூ.3.25 லட்சம்.அதாவது வட்டி வருமான மட்டுமே ரூ.1.45 லட்சம் ஆகும்.
ரூ.5.32 லட்சம் (Rs 5.32 lakh)
இத்திட்டத்தின் முதிர்வுக்குப் பிறகு மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்தால் அப்போது உங்களுக்கு ரூ.5.32 லட்சம் கிடைக்கும். இன்னும் 5 ஆண்டுகளுக்கும் நீங்கள் தொடர்ந்து சேமிக்கலாம். இவ்வாறாக மொத்தம் 40 வருடங்களில் உங்களுக்கு ரூ.26.32 லட்சம் கிடைக்கும்.
20 வயதில் தொடங்குவது சிறந்தது (It is best to start at 20 years old)
உங்களது 20ஆவது வயதில் நீங்கள் சேமிக்கத் தொடங்கினால் 60ஆவது வயதில் இவ்வளவு பெரிய தொகை உங்களது கையில் இருக்கும்.
மேலும் படிக்க...
ஊரடங்கிலும் வேளாண் பொருள் ஏற்றுமதியில் உச்சத்தைத் தொட்ட இந்தியா!
இன்று முதல் மாவட்டங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் பயணிக்க இ-பதிவு கட்டாயம்!