1. Blogs

கடன் வாங்கியோருக்கு சூப்பரான சலுகை! ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பு!

R. Balakrishnan
R. Balakrishnan
Loan
Credit : Samayam

இந்தியாவில் கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. ஊரடங்கு காலத்தில் ஊதியம் கிடைக்காத சூழல் ஏற்பட்டதால் வங்கிகளில் வாங்கிய கடனைச் செலுத்துவது, ஈஎம்ஐ (EMI) கட்டணங்களைச் செலுத்துவது கடினமானது. இதைக் கருத்தில் கொண்டு, வங்கிகளில் கடன் பெற்றவர்கள் மாதத் தவணை செலுத்துவதற்கு பல்வேறு சலுகைகளை ரிசர்வ் வங்கி (RBI) அறிவித்து வருகிறது.

சலுகை நீட்டிப்பு

கடந்த மே 5ஆம் தேதி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். ரூ.25 கோடி வரையில் கடன் பெற்ற தனிநபர்கள் மற்றும் சிறு குறு நிறுவனங்கள் கடன் தவணைச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவித்தார். இதன்படி, ரூ.25 கோடி வரையில் கடன் பெற்றவர்கள் ரிசர்வ் வங்கியின் கடன் சீரமைப்புத் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுகின்றனர். ஏற்கெனவே, சென்ற ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டவர்கள் சலுகைக் காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டது.

என்ன சலுகை கிடைக்கும்!

சென்ற ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில் இரண்டு ஆண்டுகள் வரை கடன் தவணையைத் திருப்பிச் செலுத்த அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், பெரும்பாலான கடனாளிகள் இச்சலுகையைப் பயன்படுத்தவில்லை. சென்ற முறை கடன் தவணைச் சலுகையைப் பயன்படுத்தாதவர்கள் இப்போது பயன்படுத்திக் கொள்ள ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. சென்ற முறை பயன்படுத்தத் தவறியவர்கள் இந்த முறை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் 2021 மார்ச் 31 வரையில் அவர்கள் கடனைத் திருப்பிச் செலுத்தாத விவகாரத்தில் சிக்கியிருக்கக்கூடாது.

Governer
Credit : Samayam

செய்ய வேண்டியது

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கடன் தவணைச் சலுகைக்கு விண்ணப்பிக்க, 2021 செப்டம்பர் 31 வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தேவையானவர்கள் அவர்கள் கடன் (Loan) பெற்ற வங்கியைத் தொடர்பு கொண்டு இதற்கு விண்ணப்பிக்கலாம். இச்சலுகைக்கு வாடிக்கையாளர்கள் விண்ணப்பித்தவுடன் அடுத்த 90 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட வங்கிகள் இதற்கான செயல்முறைகளை முடித்து சலுகையை வழங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி (RBI) உத்தரவிட்டுள்ளது.

புதிய விதிமுறைகள்

சென்ற முறை அறிவிக்கப்பட்ட சலுகையும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சலுகையும் சற்று வித்தியாசமானது. தற்போதைய புதிய அறிவிப்பானது கடனைத் திருப்பிச் செலுத்துவதில் நெகிழ்வான தன்மையைக் கொண்டிருக்கும். அதாவது, கடனைத் திருப்பிச் செலுத்தும் விதிமுறைகளுக்கு ஏற்ப கடனை வாடிக்கையாளர்களுக்கு உகந்த வகையில் திருப்பிச் செலுத்துவதாகும். இதில் அவகாசம் வழங்கப்படும் காலத்துக்கான வட்டி மொத்தமாக சேர்த்து கால வரம்புக்குள் வசூலிக்கப்படும். 

அல்லது கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான கால வரம்பு நீட்டிக்கப்படும். வருமானத்தைப் (Income) பொறுத்து வட்டியையோ கால வரம்பையோ மாற்றுவதாக இருக்கும். கடன் பெற்றோருக்கு சமரசம் எதுவும் கிடையாது என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

லைசன்ஸ் வாங்க இனி அலைய வேண்டாம்! வீட்டிலிருந்தே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

உரிய ஆவணம் இல்லாவிட்டால் இ-பதிவு ரத்து செய்யப்படும்!

English Summary: Great offer for borrowers! Reserve Bank announces new announcement Published on: 19 May 2021, 01:45 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.