சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மரங்களை வளர்ப்பது தான் மிகச் சிறந்த தீர்வு. மரங்களினால், மனிதனுக்கு கிடைக்கும் பயன்கள் எண்ணிக்கையில் அடங்காது. புதிய எலக்ட்ரிக் பைக் நிறுவனம், மரக்கன்றுகளை (Saplings) நட்டால், புதிய பைக் வாங்க 25,000 தள்ளுபடி என்ற அறிவிப்பை வெளியிட்டிருப்பது சமூக ஆர்வலர்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.
25,000 தள்ளுபடி:
10 மரக்கன்றுகளை நட்டால் 25 ஆயிரம் வரை தள்ளுபடி (Offer) வழங்கப்படும் என்று புதிதாக களமிறங்கியுள்ள எலக்ட்ரிக் பைக் (Electric Bike) நிறுவனம் தெரிவித்துள்ளது. கோயம்பத்தூரை சேர்ந்த ஸ்ரீவரு மோட்டார்ஸ் என்ற நிறுவனம் தனது அதிவேக எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிளை (High Speed Electric Bike) இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. க்ளாஸ், க்ராண்ட் மற்றும் எலைட் என்ற மூன்று விதமான வகைகளில் சந்தைப்படுத்தப்படவுள்ளது. இந்த பைக் மார்ச் மாதம் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. க்ராண்ட் வேரியண்ட்டின் விலை ரூ.1.99 லட்சமாகவும், எலைட் வேரியண்ட்டின் விலை ரூ.2.99 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாத தவணை திட்டம்:
பத்து மரக்கன்றுகளை வெவ்வேறு பகுதியில் நட்டு நிறுவனத்திற்கு தெரியப்படுத்தினால், இந்த புதிய எலக்ட்ரிக் பைக் வாங்க 25 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது. மேலும் எலக்ட்ரிக் பைக்கிற்கு 5,200 முதல் மாத தவணை (Monthly installment) திட்டமும் வழங்கப்பட்டுள்ளது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 126கிமீ தூரம் வரையிலும், எலைட் வேரியண்ட்டின் பேட்டரி 225கிமீ தூரம் வரையிலும் பைக் இயங்கும்.
மரங்களை நட்டால், தள்ளுபடி என்ற அறிவிப்பால் மரங்களின் எண்ணிக்கை பூமியில் அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை. இந்த அறிவிப்பால் சுற்றுச்சூழலுக்கு நன்மையே
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
சுற்றுச்சூழலை பாதுகாத்து, பயிர்களில் பூச்சிகளை விரட்டும் விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு!
மரச்செக்கு எண்ணெய்த் தயாரிப்பில் அசத்தல் லாபம் பெரும் விவசாயி செல்வம்!
கொப்பரை தேங்காய் கொள்முதல் விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்!