Blogs

Monday, 08 August 2022 08:24 AM , by: R. Balakrishnan

Pension

கடந்த 2003 ஆம் ஆண்டு வரை அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் இருந்து வந்தது. அதன் பிறகு 2004 ஆம் ஆண்டு முதல் தேசிய பென்சன் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தில் முதலில் அரசு ஊழியர்களுக்காக கொண்டுவரப்பட்ட நிலையில் அதன் பிறகு தனியார் ஊழியர்களும் இதில் முதலீடு செய்வதற்கு அனுமதிக்கப்பட்டனர்.

புதிய பென்சன் திட்டம் (New Pension Scheme)

தேசிய பென்ஷன் திட்டத்தில் ஏராளமான தனியார் ஊழியர்கள் முதலீடு செய்து வருகிறார்கள். இருந்தாலும் பழைய ஓய்வூதிய திட்டத்தில் கிடைத்தது போன்ற நிலையான பென்ஷன் மற்றும் இதர சலுகைகள் இந்த புதிய பென்ஷன் திட்டத்தில் கிடைப்பதில்லை என்று அரசு ஊழியர்கள் தொடர்ந்து புகார் கூறி வந்தனர். அதனால் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று பல்வேறு மாநில அரசு ஊழியர்கள் மற்றும் மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் வலியுறுத்தி வருகிறார்கள்.

அதனால் ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு கோரிக்கை எழுந்து வரும் நிலையில் உத்தரவாதத்துடன் ஓய்வூதியம் வழங்கும் உத்திரவாத பென்ஷன் திட்டத்தை கொண்டுவர திட்டமிட்டு இருப்பதாக பென்ஷன் ஒழுங்குமுறை ஆணையமான PFRDA தலைவர் தெரிவித்தார்.

இந்நிலையில் வருகின்ற செப்டம்பர் 30-ஆம் தேதி உத்திரவாத பென்ஷன் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. தற்போதைய பென்ஷன் நிதியில் சுமார் 35 லட்சம் கோடி ரூபாய் உள்ளது. அதில் 22 சதவீதம் தொகை தேசிய பென்ஷன் திட்டத்தில் இருக்கின்றது. 40% தொகையை EPFO நிர்வகித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்: கூட்டுறவுத் துறையின் புதிய உத்தரவு.!

மின்சார வாகனம் வாங்க போறீங்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)