1. செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்: கூட்டுறவுத் துறையின் புதிய உத்தரவு.!

R. Balakrishnan
R. Balakrishnan
Ration Shop

ரேஷன் கடைகளில் தரையில் சிந்தும் பொருட்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யக்கூடாது என்று கூட்டுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, கடந்த 27/6/2022 அன்று நடைபெற்ற பொது விநியோகத் திட்டம் தொடர்பான ஒருங்கிணைப்பு கூட்டத்தின் நடவடிக்கைகளில் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழக கிடங்குகளில் இருந்து ரேசன் கடைகளுக்கு அனுப்பப்படும் அரிசியின் தரத்தினை கிடங்குகளிலேயே சரி பார்த்து தரமான அரிசியை மட்டுமே ரேஷன் கடைகளுக்கு அனுப்புவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

ரேஷன் அரிசி (Ration Rice)

ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்ட பின்னர் தரமற்ற அரிசி கண்டுபிடிக்கப்படும் நிகழ்வுகளில் ரேஷன் கடை பணியாளர்கள் அவற்றை தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழக கிடங்குகளுக்கு திருப்பி அனுப்ப தனியாக எடுத்து வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ரேஷன் கடைகள் உட்புறமும், வெளிப்புறமும் தூய்மையாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

அத்தியாவசிய பண்டங்கள் கிடங்கில் இருந்து நகர்வு செய்யப்பட்டு ரேஷன் கடைகளில் லாரிகளில் இருந்து இறக்கும்போதும் மற்றும் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்படும் போதும் அத்தியாவசிய பொருட்கள் கீழே சிந்தாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். 

மேலும், அவ்வாறு கீழே சிந்தும் அத்தியாவசிய பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்படும் பொருட்களோடு கலந்து விடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும் படிக்க

Fixed Deposit வட்டி அதிகரிப்பு: சீனியர் சிட்டிசன்களுக்கு குட் நியூஸ்!

ஒரு ரூபாய் நாணயம் செல்லும்: எங்கு சென்றால் மாற்றலாம்!

English Summary: Good News for Ration Card Holders: Cooperative Department's New Order Published on: 30 July 2022, 09:55 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.