வெறும் 87ரூபாய்க்கு வீடுகள் வாங்கலாம் என்று சொன்னால் நம்புவீர்களா? ஆம் இது உண்மை தான், பழைய நகரங்களுக்கு புத்துயிர் ஊட்ட இத்தாலி நாட்டில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இத்தாலி நாட்டின் சிசிலியின் தென் மேற்கு பகுதியில் இருக்கும் நகரம் தான் சலேமி. இந்த நகரம் இத்தாலியின் வரலாற்று சிறப்புமிக்க தலங்களில் ஒன்றாத திகழ்ந்து வந்தது. இதை சுற்றி ஏராளமான திராட்சை தோட்டங்களும், ஆலிவ் தோப்புகளும் இருக்கின்றன.
மிக பழைமையான நகரமான சலேமியில் கடந்த 1968ஆம் ஆண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக சலேமி நகரத்தில் இருந்து 4000க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேறினர். இதனால், இந்த நகரம் பல ஆண்டுகளாக கைவிடப்பட்ட நகரமாக இருந்து வருகிறது.
இந்நிலையில், சலேமி நகரத்திற்கு மீண்டும் புத்துயிர் அளிக்க முடிவு செய்துள்ள இத்தாலி அரசு அங்கிருக்கும் வீடுகளை வெறும் 1 யூரோவுக்கு ஏலத்தில் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
1 யூரோவின் இத்தாலி மதிப்பு
ஒரு யூரோ இந்திய மதிப்பிற்கு 87 ரூபாய் ஆகும். இத்தாலியில் இந்த விலை ஒரு கப் காபி விலையை விட குறைவு. சலேமியில் இருக்கும் வீடுகளை ஒரு யூரோவுக்கு விற்பனை செய்வதால் சலேமி நகருக்கு புத்துயிர் கிடைக்கும் என அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இதோபோல் கடந்த ஆண்டு தெற்கு இத்தாலியில் உள்ள சம்புகா நகரில் வெறும் ஒரு டாலருக்கு வீடுகள் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. என்ன வெயிட் பண்றீங்க சீக்கிரம் கிளம்புங்க இத்தாலிக்கு....!
மேலும் படிக்க...
பி.எம் கிசான் திட்டத்தில் 2 தவணை பெற விண்ணப்பிக்கலாம்! அக்.31ம் தேதி கடைசி!