Krishi Jagran Tamil
Menu Close Menu

லட்சத்தில் சம்பாதிக்க வேண்டுமா? கால்நடை வளர்ப்பு தொழில்களை தேர்ந்தெடுங்கள்.. அரசு மானியத்துடன் சிறப்பான எதிர்காலம்!

Tuesday, 27 October 2020 09:24 AM , by: Daisy Rose Mary

Credit : Shutterstock

விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பிற்கு இந்தியா உலகம் முழுவதும் பிரபலமானது. பரந்து விரிந்த நிலப்பரப்பையும் அதில் அதிக மக்கள் தொகையும் கொண்ட நம் நாட்டில் விவசாயத்தை எவ்வாறு லாபகரமான தொழிலாக மாற்றுவது என்பது சிலருக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக உள்ளது. உங்கள் கிருஷிஜாக்ரன் தமிழ் அதில் முக்கிய பங்கு வகித்து விவசாயிகளுக்கு காலநிலைகளுக்கு ஏற்ற தொழில் ஐடியாக்களை தந்து வருகிறது. தற்போது மத்திய மாநில அரசுகளின் மானிய உதவியுடன் கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு தொழில் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதிககும் வழிமுறைகளை பார்க்கலாம் வாருங்கள்...

லாபகரமான கால்நடை வளர்ப்பு தொழில்கள்!

கால்நடை வளர்ப்பு (Livestock Farming) மற்றும் பராமரிப்பு மூலம் பல ஆயிரம் விவசாயிகள் மற்றம் பொதுமக்கள் ஒவ்வொருவரும் லட்சக்கணக்கில் சம்பாதிக்க முடியும். பல்வேறு வகையான உற்பத்தி மற்றும் மதிப்புக்கூட்டு பொருட்களை செய்வதே இங்கு முக்கியமானது. பல புதிய விஞ்ஞான முறைகள் இன்று கால்நடை வளர்ப்பிலும் உருவாகியுள்ளன. இந்த அறிவியல் முறைகளை மிகச் சரியாக பயன்படுத்துவதன் மூலம் விவசாயிகள் தங்கள் வருமானத்தை எளிதில் இரட்டிப்பாக்க முடியும்.

கால்நடை வளர்ப்பு வர்த்தகத்தில் பல்வேறு விலங்குகள் மூலம் செய்யலாம். இருப்பினும், அதிக லாபம் ஈட்ட உதவும் நான்கு முக்கிய விலங்குகள் ஆடு, மாடு, மீன், கோழி தொழில்கள் குறித்து இந்த செய்தியில் விரிவாகப் பார்ப்போம்.

Credit: Dinamalar

காளை & பசு வளர்ப்பு தொழில்

மாடு வளர்ப்பு தொழில் நிறைய வளர்ச்சியடைந்துள்ளது. பசு வளர்ப்பின் முக்கியத்துவம் இனி கிராமத்துக்கு மட்டும் இல்லாமல் நகரங்களில் அதன் வளர்ச்சி வேறுவிதமாக உள்ளது. பசுக்களை வளர்ப்பதன் மூலம் பால் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

பால் மற்றும் மாட்டு சாணம் இரண்டையும் பயன்படுத்தலாம் என்பதால் பசு வளர்ப்பு மிகவும் இலாபகரமான வணிகமாகும். 4 முதல் 5 மாடுகளை மட்டுமே வைத்துக்கொண்டும் மாட்டுப்பண்ணை தொழிலைத் தொடங்க முடியும்.

பசுவின் பால் குறித்து பார்க்கும் போது, ஒரு மாடு வழக்கமாக 30 முதல் 35 லிட்டர் பால் கொடுக்கும், ஒரு லிட்டர் பாலின் விலை ரூ .40 ஆக கொண்டால் ஒரு நாளில் சுமார் ரூ .1200 சம்பாதிக்கலாம் அல்லது 5 பசுவின் பாலில் இருந்து ரூ .6000 வரை சம்பாதிக்கலாம். உங்கள் தீவனம் செலவுகள் போன்றவற்றை அதிலிருந்து நீக்க வேண்டும் என்றால், குறைந்தது 5 மாடுகளுக்கு ஒரு நாளில் ரூ.2000 வரை சம்பாதிக்கலாம்.
இது தவிர, பால், தயிர், மோர், நெய் மற்றும் மாவா மூலமாகவும், மாட்டு சாணத்திலிருந்து எரிவாயு, உரம் போன்றவற்றை தயாரிப்பதன் மூலமும் அதிக லாபம் ஈட்ட முடியும்.

மீன் பண்ணை

மீன் பண்ணை அமைக்க மத்திய மாநில அரசுகள் மூலம் அதிக மானிய உதவிகள் வழங்கப்படுகிறது. மீன் வளர்ப்பில் செலவுகள் மிகக்குறைவு, நிறைவான லாபம் உள்ளது. தற்போதைய விஞ்ஞான உலகில், செயற்கை தொட்டிகள், குளங்கள் போன்றவற்றிலும் மீன்கள் வளர்க்கப்படுகின்றன.

மீன் இறைச்சியை உட்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. நல்ல புரதம் மற்றும் மீன்எண்ணெய்க்காக மருத்துவ நோக்கம் கருதி உட்கொள்கிறார்கள். வகை வகையான மீன்கள் நல்ல விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு மீனுக்கு ஒரு கிலோ மதிப்பு இருந்தால், அந்த ஒரு கிலோ மீனை ரூ.100க்கு விற்பனை செய்யலாம். 5000 மீன்களின் படி மாதத்திற்கு ரூ.40,000 முதல் ரூ.50,000 வரை சம்பாதிக்கலாம்.

Credit : Newstm

ஆடு பண்ணை தொழில்

ஆடு வளர்ப்பு மற்றும் பராமரிப்பில் அதிக லாபம் ஈட்ட முடியும். 5 ஆடுகளை வளர்ப்பதன் மூலமும் இந்த தொழிலைத் தொடங்கலாம். ஒரு ஆடு 6 மாதங்களில் இரண்டு குட்டிகளைத் தருகிறது. ஒரு ஆட்டுக்குட்டியை சந்தையில் ரூ .4000க்கு விற்றால், இரண்டு குட்டிகளிடம் இருந்து ரூ.8000 முதல் ரூ.9000 வரை சம்பாதிக்கலாம். ஆடு வளர்ப்பிற்காக அரசாங்கமும் கடன் அளிக்கிறது. மேலும் ஆட்டு இறைச்சி நல்ல விலை கிடைக்கிறது. போஷாக்கு நிறைந்த ஆட்டு பால் மூலமும், ஆட்டு தோல் மூலமும் பல்வேறு வகைகளில் சம்பாதிக்கலாம்.

கோழிப் பண்ணை

கோழி மற்றும் கோழிக்குஞ்சு வளர்ப்பு தொழிலும் நல்ல முன்னேற்றமடைந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் நாட்டில் கோழிப்பண்ணை விவசாயிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் கோழி பண்ணைகள் திறக்கப்படுகின்றன. கோழி வளர்ப்பில், முட்டை மற்றும் இறைச்சி ஆகியவற்றை வியாபாரம் செய்வதன் மூலம் லாபம் சம்பாதிக்கலாம். புரோட்டீன் காரணமாக முட்டை மற்றும் இறைச்சி விற்பனையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

 

கால்நடை பராமரிப்புக்கான அரசு மானியம்


இந்த வகையான கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு தொழிலுக்கு மத்திய மாநிய அரசுகள் பல்வேறு வகையில் மானியம் அளிக்கிறது. கொட்டகை அமைப்பதில் தொடங்கி, மதிப்பு கூட்டு பொருட்களை தயாரிக்கவும், அதனை சந்தைப்படுத்தவும் என அனைத்து வகையிலும் அரசு ஏற்பாடு செய்து தருகிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும், இதன் மூலம் கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு தொழிலை தொடங்குவது மிகவும் எளிதானது.

மேலும் படிக்க...

விவசாயப் பெண்களுக்கு வெள்ளாடுகள் & கறவை மாடுகள் வழங்கும் திட்டம்! - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தகவல்!

தொடங்கும் பருவமழை - கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை அளிக்க தொடர்பு எண் அறிவிப்பு!

விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000 கிடைக்கும் மத்திய அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இது வரை 20 லட்சம் பேர் சேர்ப்பு!!

கால்நடை தொழில் கால்நடை தொழிலில் லாபம் livestock Farming Business ideas கால்நடை தொழில் ஐடியாக்கள் business ideas
English Summary: Simply Sitting montly getting lakhs in Livestock Farmings Business ideas like aadu maadu koli valarpu with Government Subsidy

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription


Latest Stories

  1. இயற்கை வழி விவசாயம் செய்தால், தோட்டக்கலைத் துறை சார்பில் மானியம்!
  2. பயிர்க் காப்பீடு செய்யாத விவசாயிகளுக்கும் நிவாரணம்! முதல்வர் அறிவிப்பு!
  3. இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றிய விவசாயம்!
  4. வங்கக் கடலில் அடுத்த 48 மணிநேரத்தில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி.... புயலாக மாற வாய்ப்பு!!
  5. பெண்களே வாங்க..! உங்களுக்கான அம்மா இருசக்கர வாகனத் திட்டம்! - விண்ணப்பங்கள் வரவேற்பு!
  6. வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் முகாமிட்டுள்ள விவசாயிகள்! - போலீசார் விரட்டியடிப்பால் பரபரப்பு!
  7. நிவர் புயல் பாதிப்பு : பயிர் சேதம் கணக்கெடுப்பு துவக்கம்!!
  8. 10,000 உழவர் உற்பத்தியாளர் அமைப்பு உருவாக்கும் முயற்சி : தேன் உழவர் உற்பத்தியாளர் அமைப்பு துவக்கம்!!
  9. ஓசூரில் மாறி வரும் காலநிலை! குளிர்கால நோய்கள் தாக்குவதால் ரோஜா விவசாயிகள் கவலை!
  10. மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ.10 ஆயிரம் அரசு பரிசீலிப்பதாக வேளாண்துறை தகவல்!!

CopyRight - 2020 Krishi Jagran Media Group. All Rights Reserved.