Blogs

Friday, 30 December 2022 09:02 AM , by: Elavarse Sivakumar

சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு  உயர்த்தி உள்ளது. இந்த உயர்வு சேமிப்பாளர்கள் யாரும் எதிர்பார்க்காத நிலையில் அறிவிக்கப்பட்டிருப்பது, மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேமிப்பு என்பது நம் முதல் செலவாக இருக்கட்டும் என்பார்கள். .  ஏனெனில், எதிர்பாராதவிதமாக இக்கட்டானச் சூழ்நிலைகளை நாம் எதிர்கொள்ள நேரிடும்போது, இந்த சேமிப்பு பெரிதும் கைகொடுக்கும்.

சிறுசேமிப்பு

 அதிலும், சிறுசேமிப்பு  என்பது நம்முடையை வாழ்வை வளமானதாக மாற்றப் பெரிதும் துணை நிற்கும்.  அப்படி சிறுசிறுகச் சேமிப்பவர்களா நீங்கள்?  அப்படி சிறுசேமிப்பில் முதலீடு செய்பவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

 வட்டி

அஞ்சலகங்களில் நடைமுறையில் உள்ள பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கு காலாண்டுக்கு (3 மாதங்கள்) ஒரு தடவை மத்திய அரசு வட்டி விகிதங்களை மாற்றி அமைத்து வருகிறது.

இந்நிலையில், வரும் ஜனவரி முதல் மார்ச் வரையிலான நிதியாண்டின் சிறுசேமிப்பு திட்டங்கள், தேசிய சேமிப்புப் பத்திரங்கள் உள்பட பல்வேறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

உயர்வு

இதேபோல், 1 வருட, 2 வருட, 3 வருட மற்றும் 5 வருட டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்களை 1.1 சதவீதம் அதிகரித்து உயர்த்தியது. இந்த வட்டிஉயர்வு சிறுசேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு  கூடுதல் மகிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க…

காய்கறி சாகுபடிக்கு ரூ.80,000 மானியம்- தொடர்பு தொலைபேசி எண்கள் அறிவிப்பு!

மத்திய அரசு வழங்கும் ரூ.10,000-Check செய்வது எப்படி?

 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)