கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்கும் வகையில் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வரும் மத்திய அரசு, தற்போது கடல் ஆமைகளைப் பாதுகாக்க புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. கடலில் உள்ள உயிரினங்கள் மற்றும் ஆமைகளை பாதுகாப்பதற்கான அவசியத்தை கருத்தில் கொண்டு, இது தொடர்பான வழிகாட்டுதல்கள் (Guidelines) மற்றும் தேசிய செயல்திட்டத்தை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம் புதுடெல்லியில் வெளியிட்டது.
வழிகாட்டுதல்கள் மற்றும் செயல்திட்டம்
காணொலி மூலம் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், கடல்சார் பல்லுயிர்தன்மை இந்தியாவுக்கு அழகு சேர்க்கிறது என்றும், செயல்திறன் மிக்க நடவடிக்கைகளின் மூலம் அதை பாதுகாப்பது அவசியம் என்றும் கூறினார். அரசு, மக்கள் உட்பட தொடர்புடைய அனைத்து பங்குதாரர்களும் இணைந்து செயல்பட்டு எவ்வாறு கடல்சார் உயிரினங்களை (Marine creatures) பாதுகாப்பது என்பது குறித்து வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்கள் மற்றும் செயல்திட்டம் (Project) விளக்குகின்றன.
கடல் ஆமைகளை பாதுகாக்க அறிமுகப்படுத்தப்பட்ட மத்திய அரசின் புதிய திட்டம், இயற்கை மற்றும் சமூக ஆர்வலர்களிடையே (social activists) வரவேற்பை பெற்றுள்ளது. கொரோனா ஊரடங்கில் (Corona Lockdown) அதிக அளவில் மாஸ்க்குகள் கடலில் கிடப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடல்வாழ் உயிரினங்களை பாதுகாப்பதோடு, கடலில் பிளாஸ்டிக் குப்பைகள் சேர்வதை தடுக்க அரசு முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
சுற்றுச்சூழலை பாதுகாத்து, பயிர்களில் பூச்சிகளை விரட்டும் விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு!
மரச்செக்கு எண்ணெய்த் தயாரிப்பில் அசத்தல் லாபம் பெரும் விவசாயி செல்வம்!