தனியார் வேலை வாய்ப்பு முகாமில் (Job Fair) பங்கேற்க, ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம், என, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு துறை சார்பில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், வரும் டிசம்பர் 19, 20 தேதிகளில், உடுமலை ஜி.வி.ஜி., கல்லுாரியில் (GVG College) நடக்கிறது.
வேலைவாய்ப்பு முகாம்:
வேலைவாய்ப்பு முகாமில், தனியார் துறையில் (Private) வேலையளிப்பவர்கள் பங்கேற்று, பயன்தாரர்களை தேர்வு செய்ய உள்ளனர். வேலை தேடுவோர், தங்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை (Employment Registration) மற்றும் சுயதகவல் (Resume) படிவத்துடன் கலந்து கொள்ளலாம். வேலையளிப்போரும் தங்களுக்கு, தேவையான காலியிடங்களை நிரப்ப, தங்கள் வருகையை வேலைவாய்ப்பு அலுவலகத்தில், முன்பதிவு செய்து கொள்ளலாம்.
பதிவு செய்ய:
எட்டாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு படித்தவர்கள், பட்டதாரிகள், பட்டய படிப்பு படித்தவர்கள், ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவர்கள், டிரைவர், தையல் பயிற்சி பெற்றவர் பங்கேற்கலாம். பதிவு செய்ய, www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக பதிவு செய்யலாம்.
தொழில் முனைவோருக்கான ஆலோசனை
குறிப்பாக, திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவு, வெளிநாட்டு வேலை பெறுதவற்கான பதிவு, தொழில் முனைவோருக்கான ஆலோசனை (Advice for Entrepreneurs) மற்றும் வங்கிக்கடன் வழிகாட்டுதல் ஆகியவை அளிக்கப்படும்.
மேலும் தகவலுக்கு:
0421-2971152, 9499055944 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
அரசு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் பணி- ரூ.1 லட்சத்திற்கும் மேல் ஊதியம்!