கிசான் விகாஸ் பத்ரம் திட்டத்தின் வட்டி விகிதத்தை மத்திய அரசு அதிரடியாகக் குறைத்துள்ளது. இனி இத்திட்டத்தில் இரு மடங்கு லாபம் ஈட்டுவதற்கு இன்னும் அதிக காலம் எடுக்கும்.
கிசான் விகாஸ் பத்ரா (Kisan Vikas Bhadra)
இந்தியத் தபால் துறை வாயிலாக மத்திய அரசு செயல்படுத்தி வரும் ஒன்பது சிறு சேமிப்புத் திட்டங்களில் கிசான் விகாஸ் பத்ரம் (Kisan Vikas Pathra) திட்டமும் ஒன்றாகும். நீண்ட கால அடிப்படையில் இது நல்ல வருவாய் தரும் மிகச் சிறந்த சேமிப்புத் திட்டமாகும்.
கிசான் விகாஸ் பத்ரம் திட்டத்தில் அரசின் உத்தரவாதம் இருப்பதால் இந்த முதலீட்டில் அபாயம் எதுவும் இல்லை. இதனால் முதலீட்டாளர்கள் உறுதியான லாபம் பெறுவார்கள்.
1988ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இத்திட்டம்,முதலீட்டாளர்களின் பணம் இரு மடங்கு லாபம் தரும் என்பதே இதன் சிறப்பு அம்சமாக இருந்தது.
கணக்கு திறப்பது எப்படி? (How to open an account?)
கிசான் விகாஸ் பத்ரத்தைத் தனிநபரோ அல்லது மூன்று பேர் வரையில் கூட்டாகவோ வாங்க முடியும்.
10 வயதுக்கு மேற்பட்ட மைனர் கூட இந்த பத்திரத்தை வாங்கலாம். அவரது பெயரில் வயது வந்த பாதுகாவலர் அல்லது உறவினர் வாங்க முடியும். நாட்டிலுள்ள எந்தவொரு அஞ்சல் நிலையத்திலும் இந்த கிசான் விகாஸ் பத்திரத்தை நீங்கள் வாங்க முடியும்.
ஒரு நபரின் பெயரில் இருந்து மற்றொரு நபரின் பெயருக்கு இந்தப் பத்திரத்தை மாற்ற முடியும். அதேபோல, ஒரு அஞ்சல் அலுவலகத்திலிருந்து மற்றொரு அஞ்சல் அலுவலகத்துக்கும் நீங்கள் பத்திரக் கணக்கை மாற்றிக்கொள்ளலாம்.
முதலீடு (Investment)
இத்திட்டத்துக்கான வட்டி விகிதத்தை ஒவ்வொரு காலாண்டுக்கும் ஒரு முறை மத்திய நிதியமைச்சகம் நிர்ணயிக்கிறது. தற்போதைய நிலவரப்படி 6.9 சதவீத வட்டி நடைமுறையில் உள்ளது. இதன்படி பார்த்தால் நீங்கள் முதலீடு செய்யும் தொகை 10 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்களில் இரட்டிப்பாகி விடும்.
இத்திட்டத்தில் நீங்கள் குறைந்தது 1,000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். அதிகபட்ச வரம்பு எதுவும் கிடையாது. நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்ய முடியும்.
வட்டி குறைப்பு (Reduction of interest)
இந்நிலையில் கிசான் விகாஸ் பத்ரா திட்டத்துக்கான வட்டி விகிதம் தற்போது உள்ள 6.9 சதவீதத்திலிருந்து 6.2 சதவீதமாகக் குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதனால் முதலீட்டுப் பணத்தில் இரு மடங்கு லாபம் எடுக்க மேலும் கூடுதல் தேவைப்படும் . தற்போதைய நிலையில் 124 மாதங்களில் இத்திட்டத்தின் கீழ் இரு மடங்கு லாபம் ஈட்டலாம். ஆனால், புதிய வட்டி விகிதத்தில் இரு மடங்கு லாபம் ஈட்டுவதற்கு மொத்தம் 138 மாதங்கள் தேவைப்படும்.
மேலும் படிக்க...
விபத்தில் சிக்குவோருக்கு பணமில்லா சிகிச்சை: மத்திய அரசு புதிய திட்டம்!!
ABVKY : அடல் பிமித் வியக்தி கல்யாண் யோஜனா மூலம் வேலை இழந்தவர்கள் சம்பளம் பெறுவது எப்படி?
ஆண்டுக்கு ரூ.100 மட்டுமே! - பாதுகாப்பு வாழ்நாள் முழுவதற்கும்!