Krishi Jagran Tamil
Menu Close Menu

ஆண்டுக்கு ரூ.100 மட்டுமே! - பாதுகாப்பு வாழ்நாள் முழுவதற்கும்!

Friday, 23 October 2020 06:49 PM , by: Daisy Rose Mary

இந்தியாவில், ஏராளமான மக்கள் குறைந்த வருமாத்தை பெறும் சமூகத்தை சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். அவர்களின் சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதில் முக்கியமான திட்டமாக இருக்கிறது "ஆம் ஆத்மி பீமா யோஜனா" (Aam Aadmi Bima Yojana)திட்டம். ஆண்டுக்கு 100 ரூபாய் பிரீமியம் செலுத்தி 75,000 பெற வழிவகுக்கும் இந்த காப்பீடு திட்டத்தில் சேர தகுதி மற்றும் பயன்கள் குறித்து தெரிந்துக்கொள்வோம்.

ஆம் ஆத்மி பீமா யோஜனா திட்டம்

அமைப்புசாரா துறையில் பணிபுரியும் மக்களின் குடும்பத்திற்கு சமூக பாதுகாப்பை வழங்குவதற்காக மத்திய அரசு இந்த திட்டத்தை கடந்த 2007-ம் ஆண்டு அறிமுகம் செய்தது, இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (LIC)கீழ் இந்த திட்டமானது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

யார் ஆம் ஆத்மி பீமா யோஜனா திட்டத்திற்கு தகுதியானவர்கள்?

 • ஆம் ஆத்மி பீமா யோஜனா திட்டத்தில் இணைய விண்ணப்பதாரர் 18 வயது முதல் 59 வயது வரை இருக்க வேண்டும்.

 • விண்ணப்பதாரர் குடும்பத்தின் தலைவராக இருக்க வேண்டும். அல்லது அவரது குடும்பத்தின் ஒற்றை சம்பாதிக்கும் உறுப்பினராக இருக்க வேண்டும் அல்லது வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்க வேண்டும்

 • அல்லது நிலமற்ற கிராமப்புற இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். பிபிஎல் (Below Poverty Line) மேலே உள்ளவர்களும் சேரலாம். ஆனால் அவர்கள் வாக்காளர் பட்டியலில் சேராமல் நகர்ப்புற இந்தியாவில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும்.

ஆத்மி பீமா யோஜனாவின் பயன்கள்

 • இந்த திட்டத்தின் கீழ், பாலிசி காலத்தில் ஒருவர் சாதாரண சூழ்நிலையில் இறந்தால், அவரது நாமினிக்கு (Nominee) ரூ .30,000 வழங்கப்படும்.

 • தற்செயலான மரணம் ஏற்பட்டால், பாலிசிதாரரின் Nominee எல்.ஐ.சி யிலிருந்து ரூ .75,000 வரை உரிமை கோரலாம்.

 • பாலிசிதாரருக்கு விபத்து காரணமாக ஓரளவு ஊனமுற்றவராக இருந்தால், பாலிசிதாரருக்கு ரூ .37,500 உரிமைகோரல் தொகை வழங்கப்படும்.

 • இந்த எல்.ஐ.சி பாலிசியில் பாலிசிதாரரின் இரண்டு குழந்தைகளுக்கும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் படி 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் பாலிசிதாரரின் இரண்டு குழந்தைகளுக்கு படிப்பு தொடர அரை ஆண்டுக்கு ரூ .100 உதவித்தொகை வழங்கப்படும்.

பாலிசி தொகை

இந்த திட்டத்தின் சேர ஒரு உறுப்பினருக்கு ஆண்டுக்கு ரூ .200 / ஆகும், இதில் 50 சதவீதம் சமூக பாதுகாப்பு நிதியிலிருந்து மானியமாக வழங்கப்படும். எனவே தகுதியானவர்கள் வெறும் 100 ரூபாய் செலுத்தி இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் மூலம் தங்களின் வாழ்நாள் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.

மேலும் படிக்க..

ABVKY : அடல் பிமித் வியக்தி கல்யாண் யோஜனா மூலம் வேலை இழந்தவர்கள் சம்பளம் பெறுவது எப்படி?

ரூ.5000 வேண்டுமா? ரொம்ப சிம்பிள் - உங்கள் ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்திடுங்கள் போதும்!

ஒரு லட்சம் முதலீடு செய்து 2 லட்சம் திரும்பி பெறலாம்!! 100% லாபம் தரும் கிசான் விகாஸ் பத்திர திட்டம் - மூலம் விபரம் உள்ளே!!

English Summary: Deposit Rs.100 per year and Get Rs.75000 through this Aam Aadmi Bima Yojana who are not on a payroll system

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription


Latest Stories

 1. நிவர் புயல் பாதிப்பு : பயிர் சேதம் கணக்கெடுப்பு துவக்கம்!!
 2. 10,000 உழவர் உற்பத்தியாளர் அமைப்பு உருவாக்கும் முயற்சி : தேன் உழவர் உற்பத்தியாளர் அமைப்பு துவக்கம்!!
 3. ஓசூரில் மாறி வரும் காலநிலை! குளிர்கால நோய்கள் தாக்குவதால் ரோஜா விவசாயிகள் கவலை!
 4. மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ.10 ஆயிரம் அரசு பரிசீலிப்பதாக வேளாண்துறை தகவல்!!
 5. நிவர் புயல் எதிரொலி : சூறைக்காற்றில் சிக்கிய வேளாண் பயிர்கள் - விவசாயிகள் வேதனை!!
 6. தேசிய பால் தினம் 2020 : வெண்மைப் புரட்சியின் தந்தை வர்கீஸ் குரியன் குறித்து தெரியுமா உங்களுக்கு!!
 7. கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்ளும் கடைசி நபராக நான் இருக்க விரும்புகிறேன்- ஜக்கி வாசுதேவ்!
 8. பயிர் கடன் பெறுவது எப்படி? பயிர் கடன் தரும் வங்கிகள் என்னென்ன? முழு விவரம் உள்ளே!!
 9. Niver Cyclone : அதிகாலையில் கரையைக் கடந்தது - 140 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்றுடன் கனமழை- வெள்ளத்தின் பிடியில் தமிழகம்!
 10. அதிதீவிர புயலாக மாறியது நிவர்; மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் நகர்கிறது!

CopyRight - 2020 Krishi Jagran Media Group. All Rights Reserved.