இன்சூரன்ஸ் என்றாலே ஒதுங்கியவர்கள் கூட தற்போது தேடிப்போய் இன்சூரன்ஸ் வாங்கும் நிலை இருந்து வருகின்றது. கொரோனாவின் வருகைக்கு பிறகு மக்களுக்கு இன்சூரன்ஸ் மீதான ஆர்வம் என்பது கணிசமாக அதிகரித்துள்ளது. நீங்கள் இல்லாத நேரத்தில் உங்களைச் சார்ந்தவர்களுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தினை கொடுக்கிறது. அப்படி எனில் உங்களுக்கு ஏற்ற சிறந்த காப்பீட்டுத் திட்டம், இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் ஜீவன் சிரோமணி திட்டம் ஒரு நல்ல சான்ஸ் எனலாம்.
ரூ.1 கோடிக்கு உத்தரவாதம்
எல்ஐசி அனைத்து தரப்பு மக்களையும் மனதில் வைத்து இந்த பாலிசியைத் திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் நீங்கள் நல்ல லாபம் பெறுவீர்கள். எல்ஐசி ஜீவன் சிரோமணி திட்டம் பாதுகாப்பு மற்றும் சேமிப்பு இரண்டையும் வழங்குகிறது. ஜீவன் சிரோமணி திட்டம் இணைக்கப்படாத திட்டம். இதில், காப்பீட்டுத் தொகையில் குறைந்தது 1 கோடி ரூபாய்க்கு உத்திரவாதம் கிடைக்கும்
ஜீவன் சிரோமணி திட்டம்
எல்ஐசி தனது வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் வாழ்க்கையை பாதுகாப்பதற்காக, பல நல்ல காப்பீட்டு திட்டங்களை வழங்கி வருகிறது. எல்ஐசி இணைக்கப்படாத, வரையறுக்கப்பட்ட பிரீமியம் பணம் திரும்பப் பெறும் திட்டம். இது சந்தையுடன் இணைக்கப்படாத ஒரு நல்ல திட்டமாகும். இந்த திட்டம் முக்கியமான மருத்துவ சிகிச்சைகளுக்கும் உதவுகிறது. இதில் ரைடர் திட்டங்களும் உள்ளன.
இறப்பு பலன்
இந்த பாலிசியில் பாலிசிதாரரின் குடும்பத்திற்கு பாலிசி காலத்தின் போது, பாலிசிதாரர் இறந்து விட்டால், இறப்பு பலன் மூலம் குடும்பத்திற்கு நிதி ஆதரவை வழங்குகிறது. இந்த பாலிசியில், பாலிசிதாரர்கள் இறக்கும் வரை, குறிப்பிட்ட காலத்தில் பணம் செலுத்தும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, முதிர்ச்சியின் போது ஒரு மொத்த தொகை வழங்கப்படுகிறது.
உயிர் வாழும் காலத்திலும் பலன்
பாலிசிதாரர் உயிர்வாழும் காலத்திலும் பலன் உண்டு.
- 14 வருட பாலிசி -10 வது & 12 ஆம் ஆண்டு காப்பீடு தொகை 30-30%
- 16 வருட பாலிசி -12 வது மற்றும் 14 வது ஆண்டு காப்பீடு தொகை 35-35%
- 18 வருட பாலிசி -14 வது & 16 வது ஆண்டு காப்பீடு தொகை 40-40%
- 20 வருட பாலிசி -16 வது மற்றும் 18 வது ஆண்டு காப்பீட்டுத் தொகையில் 45-45%.
வயது வரம்பு
- 16 வருட பாலிசிக்கு 51 ஆண்டுகள்
- 18 வருட பாலிசிக்கு 48 ஆண்டுகள்
- 20 வருட பாலிசிக்கு 45 ஆண்டுகள்
குறைந்தபட்ச காப்பீடு
இந்த பாலிசியில் குறைந்தபட்ச காப்பீடு தொகை 1 கோடி ரூபாயாகும். இதில் அதிகபட்ச காப்பீடு தொகை வரம்பு என்பது இல்லை (அடிப்படை காப்பீட்டு தொகை 5 லட்சம் பெருக்கத்தில் இருக்கும்.). இதன்பாலிசி காலம்: 14, 16, 18 மற்றும் 20 ஆண்டுகள்.பிரீமியம் செலுத்த வேண்டிய காலம் 4 ஆண்டுகள் ஆகும்.
மேலும் படிக்க
அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: ஜனவரியில் வெளியாகும் முக்கிய அறிவுப்பு!
சிங்கிள் பசங்களுக்கு ஏற்ற சிறந்த முதலீட்டுத் திட்டங்கள் இவை தான்!