1. செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: ஜனவரியில் வெளியாகும் முக்கிய அறிவிப்பு!

R. Balakrishnan
R. Balakrishnan
4% DA Hike

மத்திய அரசு ஊழியர்கள் தற்போது 34% அகவிலைப்படி பெற்றுவரும் நிலையில், மீண்டும் 2023 ஜனவரிக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

அகவிலைப்படி உயர்வு (DA Hike)

மத்திய அரசு, தனது ஊழியர்களுக்கு ஆண்டிற்கு இரண்டு முறை அதாவது ஜனவரி- ஜூன் மற்றும் ஜூலை – டிசம்பர் ஆகிய தவணைகளுக்கான அகவிலைப்படியை உயர்த்துகிறது. நாட்டின் பண வீக்க விகிதத்தினை மத்திய அரசு ஊழியர்கள் சமாளிக்கும் வகையில், AICPI குறியீட்டின் படி இந்த அகவிலைப்படி நிர்ணயம் செய்யப்படுகிறது. தற்போதைய ஜூலை – டிசம்பர் 2022 வரையிலான தவணைக்கு முன்னதாக இருந்த 34% ல் இருந்து 4% DA உயர்த்தப்பட்டு 38% அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 2023 ஜனவரி – ஜூன் வரையிலான தவணைக்கு அகவிலைப்படி உயர்வு 4% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பு வரும் ஜனவரி மாதம் புத்தாண்டு சிறப்பு அறிவிப்பாக வெளியாகும் என்று அரசு தரப்பு வட்டாரங்கள் கூறுகின்றன.

இதன் மூலம் அடிப்படை சம்பளமாக ரூ.18,000 பெறும் ஊழியர்கள் 4% அகவிலைப்படி உயர்வினால் மாதம் ரூ.720 வீதமும், அதிகபட்ச ஊதியமான ரூ.56,900 பெறும் ஊழியர் மாதம் ரூ.2,276 ம் கூடுதலாக பெறுவார்கள்.

மேலும் படிக்க

சிங்கிள் பசங்களுக்கு ஏற்ற சிறந்த முதலீட்டுத் திட்டங்கள் இவை தான்!

பென்சனர்களுக்கு அரசின் சிறப்பு முகாம்: எதுக்கு தெரியுமா?

English Summary: Salary hike for government employees: Important information to be released in January! Published on: 15 November 2022, 07:43 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.