Blogs

Friday, 03 September 2021 08:58 AM , by: Elavarse Sivakumar

டாஸ்மாக் மதுக்கடைகளில் , கொரோனா தடுப்பூசிப் போட்டதற்கானச் சான்றிதழைக் காண்பிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக நீலகிரி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மதுப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தடுப்பூசி (Vaccine)

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதேநேரத்தில், அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வதை உறுதி செய்யவும் முனைப்புக் காட்டி வருகிறது.

அதிரடி அறிவிப்பு (Notice of Action)

ஏற்கனவே தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள், தடுப்பூசி போடுவதற்காக பல்வேறு முகாம்கள் நடந்துவரும் நிலையில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இந்தப் புதிய உத்தரவை அறிவித்துள்ளார்.

இதன்படி, இரண்டு டோஸ் தடுப்பூசியும் போட்டதற்கான சான்று காட்டினால் மட்டுமே மதுபானம் வழங்கப்படும்.

உடனடியாக அமல் (Effective immediately)

தற்போது நீலகிரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் மது வாங்கச் செல்வோர் ஆதார் அட்டை, கொரோனா தடுப்பூசி சான்றிதழைக் காண்பிக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தச் சான்றுகளை மதுக்கடை ஊழியர்களிடம் காண்பித்தால் மட்டுமே மது வழங்கப்படும். இந்த நடைமுறை, உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் சிறப்புக் குழு அமைத்து, சுகாதாரத்துறையினர் வீடு வீடாகச் சென்று அனைவருக்கும் தடுப்பூசி போடும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றனர். கூடிய விரைவில் நீலகிரி மாவட்டத்தில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸூம் போடப்படும் என மாவட்ட ஆட்சியர் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

மதுப்பிரியர்களுக்கு  அதிர்ச்சி (Shock to alcoholics)

நீலகிரி மாவட்ட ஆட்சியரின் இந்த அறிவிப்பு மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இருப்பினும், கொரோனா தடுப்பூசி சான்றைக் காண்பித்தால் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு மது வழங்கப்படும் என்ற நடைமுறையால் மதுப்பரியர்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க...

அச்சச்சோ மீண்டும் கட்டுப்பாடுகளா? கொரோனாவை விரட்ட புதியத் திட்டம்!

கொரோனாவை ஒழிக்க 2 Dose கட்டாயம்- மத்திய அரசு அறிவிப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)