1. செய்திகள்

அச்சச்சோ மீண்டும் கட்டுப்பாடுகளா? கொரோனாவை விரட்ட புதியத் திட்டம்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Again restrictions? New plan to drive out corona!

அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரவுள்ளன.

உலுக்கும் கொரோனா (Shaking corona)

ஐரோப்பிய நாடான பல்கேரியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பின் மூன்றாவது அலை தொடங்கியுள்ளது. இங்கு போதிய அளவில் தடுப்பூசி போடப்படாத காரணத்தால் கோவிட்-19 பரவல் வேகமாக அதிகரித்துள்ளது.

தொடர்ந்து அதிகரிப்பு (Continuing increase)

அதிலும், கடந்த சில வாரங்களில் பாதிப்புகள் மிகவும் அதிகமாக உள்ளன. இதன் பின்னணி உருமாறிய டெல்டா வகை வைரஸ் தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் 71 ஆக இருந்த தினசரி பாதிப்புகள் தற்போது 94ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்ச உயிரிழப்பு  (Maximum mortality)

செப்டம்பர் 1ம் தேதி புதிதாக 1,745 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 32,192ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்று பரவியதில் இருந்து தற்போது வரை 18,950 பேர் பலியாகி இருக்கின்றனர்.

நேற்றைய தினம் மட்டும் 54 பேர் உயிரிழந்துள்ளனர். ஐரோப்பிய யூனியனில் அதிகபட்ச உயிரிழப்பு விகிதத்தைக் கொண்ட ஒரே நாடாக பல்கேரியா உருவெடுத்துள்ளது.

புதியக் கட்டுப்பாடுகள் (New restrictions)

இவ்வாறு வேகமாக அதிகரித்து வரும் கொரோனா  வைரஸ் தொற்றுப் பரவலைக் கருத்தில் கொண்டு வரும்வகையில், செப்டம்பர் 7ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகளை பல்கேரிய அரசு விதித்துள்ளது.

அதன்படி, உணவகங்கள், பார்கள் உள்ளிட்டவை இரவு 10 மணிக்கு மேல் செயல்படக் கூடாது. இசை திருவிழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சினிமாஸ், தியேட்டர்கள் உள்ளிட்டவை 50 சதவீத பார்வையாளர்களுடன் இயங்கலாம்.

பள்ளிகள் (Schools)

வரும் 15ஆம் தேதிக்குப் புதிய கல்வியாண்டு தொடங்குகிறது.எனவே அன்று முதல் மாணவர்கள் வகுப்புகளில் கலந்து கொள்ளலாம். ஒருவேளை தற்போதைய சூழல் மேலும் விபரீதமடைந்தால் உடனே ஆன்லைன் வாயிலாக கல்வி முறைக்கு மாற்றப்படும் என்று பல்கேரிய சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்டோய்சோ கட்சரோவ் தெரிவித்துள்ளார்.

வரும் அக்டோபர் இறுதிவரை (Until the end of October)


அவர் மேலும் கூறுகையில், அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பைக் கண்டு பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். நிலைமை சற்று மோசமாக தான் இருக்கிறது. ஆனால் கையை மீறிப் போகவில்லை.

தடுப்பூசி கட்டாயம் (Vaccination is mandatory)

குறைந்த சதவீதத்தில் தடுப்பூசி போடப்பட்டிருப்பதன் காரணமாக புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.எனவே பல்கேரிய மக்கள் அனைவரும் விரைவாக தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கேட்டுக் கொண்டார்.

இந்தப் புதியக் கட்டுப்பாடுகள் வரும் அக்டோபர் மாத இறுதி வரை அமலில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

துளசி ஒரு ஆரோக்கிய வரம்! துளசியின் 8 பெரிய நன்மைகள் இதோ!

அரசாங்க மானியத்துடன் இஞ்சி விவசாயம்! லாபம் 15 லட்சம்!

English Summary: Again restrictions? New plan to drive out corona! Published on: 02 September 2021, 08:06 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.