தென்னிந்தியத் திரையுலகினர் கூடி, மனதார வாழ்த்தும் திருவிழா ஒன்று ஜூன் 9ம் தேதி சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் நடைபெற உள்ளது.
ஆம். தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம்தான். இதன் மூலம் நீண்ட காலமாக நீடித்து வந்த சர்க்கைக்கு முடிவு கிடைத்துள்ளது. வாழ்த்த ரசிகர்களும், திரையுலகினரும் தயாராகி வருகின்றனர்.
நயன்தாரா
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா.
இவர், முன்னணி நடிகர்கள் படங்களில் மட்டுமல்லாது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் நயன்தாரா விஜய் சேதுபதி சமந்தா ஆகியோருடன் நடித்திருந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம் பெரிய வெற்றியை பெற்றது.
சுற்றுலா
இந்நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வரும், நயன்தாரா தொடர்ந்து படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் காதலனுடன் வெளியில் செல்வது வெளிநாடு சுற்றுலா செல்வது என ஜாலியாக சுற்றி திரிந்து வந்தார்.
திருமணத் தேதி
எனவே இவர்களது திருமணம் எப்போது நடைபெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விக்கி நயன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வரும் ஜூன் மாதம் திருமணம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இருவரும் அடுத்த மாதம் திருப்பதியில் திருமணம் செய்ய இருப்பதாகத் தகவல் வெளியானது.
பத்திரிகை
இந்நிலையில், தற்போது அவர்கள் திருமண பத்திரிகை இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. இந்த பத்திரிக்கையில் ஜூன் 9ம் தேதி மகாபலிபுரத்தில் திருமணம் நடக்க இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் விக்கி- நயன் திருமணம் எங்கு நடக்கிறது என்ற கேள்விக்கு விடை கிடைத்துள்ளது.
சென்னை மகாபலிபுரத்தில் நடக்க இருக்கும் இந்தத் திருமணத்தில் தென்னிந்திய சினிமா துறையின் முக்கிய நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருமணத்திற்கு முன்பு இந்தியா முழுவதும் பல்வேறு கோவில்களில் விக்கி – நயன் இருவரும் பூஜைகள் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
இனி 2000 ரூபாய் நோட்டுகள் கிடையாது- ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
Indian Air Forceஸில் வேலை - பிளஸ் 2 படித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு!