தமிழகத்தைப் பொறுத்தவரை, தேர்தல் வரும்போது, அதுதொடர்பான பொருட்கள் அமோக விற்பனையாகும். அந்த காலகட்டத்தில், அத்தகையப் பொருட்களுக்கு மட்டுமே மவுசு இருக்கும்.
சின்னத்துடன் கூடிய முகக்கவசம் (Mask with logo)
இதனைப் பயன்படுத்திக்கொண்டால், குறுகிய காலத்தில் அதிக லாபம் ஈட்ட முடியும். உண்மையில் இதுவும் சீசன் பிஸ்னஸ் தான் (Seasonal Business). அவ்வாறு தற்போதேக் களைகட்டத் தொடங்கியுள்ள சீசன் பிஸ்னஸ்தான், கட்சிச் சின்னத்துடன் கூடிய முகக்கவங்கள்.
சட்டமன்றத் தேர்தல் (Legislative election)
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6-ந் தேதி நடைபெற உள்ளது.இதனையொட்டி தேர்தல் நடைமுறை விதிகள் அமல்படுத்தப்பட்டு உள்ளது.கூட்டணிப் பங்கீடு பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு என தமிழக அரசியல் களம் சுறுசுறுப்பாக உள்ளது.
கட்சிக்கொடி (Party flag)
அதேநேரத்தில் பிரசாரத்துக்குத் தேவையான கட்சி கொடிகள் தயாரிக்கும் பணிகள் கோவையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
துணிகள் கொள்முதல் (Purchase of fabrics)
ஈரோடு மாவட்டத்தில் இருந்து மொத்தமாகத் துணிகள் கொள்முதல் செய்யப்பட்டு அரசியல் கட்சிகளுக்கு ஏற்ப வண்ணமாக்கப்படுகிறது. அதன் பிறகு ஸ்கிரீன் பிரிண்டிங் முறையில் கொடிகளில் அந்தந்த கட்சிகளின் சின்னங்கள் பொறிக்கப்படுகிறது.
பணிகள் அனைத்தும் முழுமை பெறும் நிலையில் கொடிகள் விற்பனைக்காக கோவை, திருப்பூர், திருச்சி, சேலம், கரூர், நாமக்கல், மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு ஆர்டரின் பேரில் அனுப்பி வைக்கப்பட உள்ளது.
2 ஆயிரம் கொடிகள் (2 thousand flags)
ஒரு நாளைக்கு 2 ஆயிரம் கொடிகள் வீதம் தயாரிக்கப்படுகிறது. காட்டன், வெல்வெட், பாலிஸ்டர் துணி வகைகளில் தயாரிக்கப்படும் கட்சி கொடிகள் 8-க்கு 10 அங்குலம் வரையும், 10-க்கு 60 அங்குலம் வரையும் பல்வேறு அளவுகளில வடிவமைக்கப்பட்டு வருகிறது.
கட்சிச் சின்ன முகக்கவசம் (Party logo mask)
இதுஒருபுறம் இருக்க, கொரோனா பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு தேர்தலுக்காக புது முயற்சியாக கட்சி வண்ணங்களில் , அந்தந்த கட்சியின் சின்னங்கள் வரையப்பட்ட முக கவசங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த முக கவசங்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
வாழ்வாதாரம் கேள்விக்குறி (Livelihood question)
இது குறித்து கட்சி கொடிகள் தயார் செய்யும் தொழிலாளி ஒருவர் கூறியதாவது:-
கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்று காரணமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால் கொடிகள் தயாரிப்பு பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டோம். இந்த தொழில் முடக்கத்தால் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது.
ஆனால் குடியரசு தினத்துக்கு தேசிய கொடிகள் தயாரிக்க ஆடர்கள் அதிகம் கிடைத்ததால் தொழிலாளிர்களுக்கு மீண்டும் வேலை வாய்ப்பு கிடைத்தது. தற்போது தேர்தலை முன்னிட்டு கட்சிக் கொடிகள் தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதால் நாங்கள் மகிழ்ச்சியடைந்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் படிக்க...
விறுவிறுப்பாக வியாபாரம் ஆகும் விதைப்பந்து - அதிக லாபம் தரும் சூப்பர் பிஸ்னஸ்!
15 மடங்கு லாபம் தரும் சூப்பர் Business- விபரம் உள்ளே!
வேளாண் துறையில் லாபம் ஈட்ட வேண்டுமா? இதோ உங்களுக்காக அருமையான 20 யோசனைகள்