1. தோட்டக்கலை

வேளாண் துறையில் லாபம் ஈட்ட வேண்டுமா? இதோ உங்களுக்காக அருமையான 20 யோசனைகள்

KJ Staff
KJ Staff
Indian Farmer

வேளாண்மை என்பது ஒரு காலத்தில் மிகவும் செழிப்பாக இருந்தது. இன்று பல்வேறு காரணங்களால்  நலிவடைந்து நஷ்டத்தில் சென்று கொண்டிருக்கிறது. வறட்சி, கடன், போன்றவற்றால் நமது விவசாகிகள் செய்வதறியாது தவித்து வருகிறார்கள்.

 விவாசகிகளின் வருமானத்தை பெருக்கவும், வாழ்வாதாரத்தை உயர்த்தவும் வேளாண் மற்றும் வேளாண்  சார்த்த தொழிகளை தொடங்கி லாபம் ஈட்டுவதற்கான யுக்திகளை வழங்குவதே இக்கட்டுரையின் நோக்கம். 

வேளாண் சார்த்த  தொழில்களை மூன்று பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம்.

உற்பத்தி சார்த்த தொழில்: கால்நடை தீவனம், விதை தயாரித்தல், இயற்கை உரங்கள் தயாரித்தல்,  

வேளாண் பொருட்கள் தயாரித்தல்: மூலப்பொருட்கள் தயாரித்தல், மதிப்பு கூட்டபட்ட பொருட்கள் தயாரித்தல், உணவு பொருட்கள் தயாரித்தல்

சேவை சார்ந்த தகவல்கள்: கடன் வசதி, காப்பீடு, கிடங்கு, பதன்படுத்துதல், வாகன வசதி, பேக்கிங் செய்வது

Agriculture Farming

இதோ உங்களுக்காக லாபம் தரக்கூடிய சிறந்த வேளாண் தொழில்கள்     

1. விவசாய பண்ணை அமைத்தல்

குறைந்த முதலீட்டில் உடனடியாக தொடங்க தொழில் விவசாய பண்ணை அமைத்தல். நாம் வசிக்கும் பகுதியின் தேவையை பொறுத்து உற்பத்தி செய்து உள்ளூர் சந்தைகளில் விற்பனை செய்யலாம்.  இதன் மூலம் வருமானத்தை பெருக்கி கொள்ளலாம்.

2.மண்புழு உரம் தயாரித்தல்

லாபம் தர கூடிய மற்றுமொரு தொழில் மண்புழு உரம் தயாரித்தல். இன்று பெரும்பாலானோர் இயற்கை விவசாயத்தின் பக்கம் திரும்பியுள்ளனர். எனவே இதற்கான தேவையும், அவசியமும் இருப்பதால் இந்த வகையான தொழிலை தொடங்கலாம்.

3. உலர்ந்த மலர்கள் விற்பனை

வேகமாக வளர்ந்து வரும் மற்றொரு துறை எனலாம், மதிப்பு கூட்ட பட்ட பொருட்கள் தயாரிப்பதற்கும், அழகு சாதன பொருட்கள் தயாரிப்பதற்கும் பெருமளவில் தேவைப்படுகிறது.

4. உர விநியோகம் தொழில்

சற்று முதலீடு அதிகமாக தேவைப்படும், எனினும் லாபம் தர கூடிய தொழில். இந்த வகையான தொழில் ஈடுபட விரும்புவோர் முறையான அரசு அனுமதி பெற்று தொடங்க வேண்டும்.

Dreen House

5. பசுமை குடில்

இன்று உலகம் முழுவதும் விஷமற்ற உணவை விரும்புவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே இயற்கை முறையில் விளைவிக்கும் பொருட்களுக்கான தேவை இருப்பதால் சந்தையில் நல்ல விலை கிடைக்கும்.

6. கோழி பண்ணை

வளர்ந்து வரும் துறைகளில் கோழி பண்ணை அமைத்தல் ஆகும். இதற்கான தேவை அதிகம் இருப்பதால் இன்று நவீன மயமாக்கப்பட்டு உள்ளது. நாம் இயற்கையான முறையில் கோழிகளை வளர்த்து விற்பனை செய்யலாம்.

7.காளான் பண்ணை

மிக குறைந்த நாட்களில் லாபம் தர கூடிய தொழில் இது. இதற்கான முதலீடு வெகு குறைவே ஆகும். இதை பற்றிய முழுமையான பயிற்சி மேற்கொண்டு செய்தல் கனிசமான லாபம் உறுதி.

8. மண்ணிலா விவசாயம்

அனைத்து வளங்களும் குறைந்து வரும்  நிலையில் மண்ணுக்கு மாற்றாக மண் பயன்பாடு இல்லாமல் நீர் சார்ந்த, ஊட்டச்சத்துக் கொண்ட விவசாயப் பயிர்களை ஒரு பிளாஸ்டிக் குழாயில் வளர்க்கும் முறையாகும். மண்ணில் வளர்க்கப்படும் முறையை விட ஹைட்ரோஃபோனிக்ஸ் முறையில் உபயோகிக்கும் தண்ணீரின் அளவு குறைவு. இந்த முறையில் செடிகள் வளர்த்து விற்பனை செய்யலாம்.

Snail Farming

9. நத்தை வளர்ப்பு

நத்தைகள் மூலம் விவசாயிகள் அதிக வருமானம் ஈட்டுகின்றனர். இது உடலுக்கு தேவையான ஆற்றலை தருவதுடன் உடல் எடையை குறைக்க உதவுகிறது. இதனால் உலகம் முழுவதும் இதற்கான தேவை அதிகரித்து வருகிறது.

10. சூரியகாந்தி வளர்ப்பு

இதன் வித்துக்கள் எண்ணெய் தயாரிப்பிற்கு பெரிதும் பயன்படுவதால் இதற்கான சந்தை மிக பெரியது. எனவே இதனை வளர்த்து அதிக லாபம் ஈட்டலாம்.

11. தேனீ வளர்ப்பு

வளர்ந்து வரும் துறைகளில் தேனீ வளர்ப்பும் ஒன்று. முறையாக செய்து வந்தால் தேன் மற்றும் பிசின் போன்றவற்றை அதிக அளவில் உற்பத்தி செய்து விற்பனை செய்யலாம்.  உலகம் முழுவதும் இதற்கான தேவை இருப்பதால் குறைத்த முதலீட்டில் மிக அதிக லாபம்  ஈட்டலாம்.

Backyard Fish farming

12. மீன் வளர்ப்பு

லாபம் ஈட்ட கூடிய மற்றொரு தொழில் மீன் வளர்ப்பு. தேவையான இட வசதியும், நீர் வசதியும் இருந்தால் குறைந்த முதலீட்டில் இதனை தொடங்கலாம்.

13. காய்கறிகள் மற்றும் பழங்கள் ஏற்றுமதி

யார் வேண்டுமானாலும் இவ்வகை தொழிலை தொடங்கலாம். உள்ளூர் விவசாகிகளிடமிருந்து பொருட்களை வாங்கி தேவைபடுவோருக்கு விநியோகிக்கலாம். மொபைல் மற்றும் இன்டர்நெட் வசதி போதுமானது, உங்கள் வியாபாரத்தை தொடங்க.

14. மலர்கள் விற்பனை

உலகம் முழுவதும் இன்று மலர்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்படுகிறது. இதற்கு தேவை மலர்கள் உற்பத்தி செய்பவர்களின் தொடர்பு. லாபம் தரக்கூடிய மற்றுமொரு தொழில்.

15. பதப்படுத்தப்பட்ட மாமிசம்

பெரும்பாலான நாடுகளில் பதப்படுத்தப்பட்ட மாமிசதையே பயன்படுத்துகிறார்கள். முறையான பயிற்சி மேற்கொண்டு, இந்த தொழிலை தொடங்கினால் லாபம் ஈட்டலாம்.

Natural Pest Control (Ladybug)

16. இயற்கை பூச்சி விரட்டி தயாரித்தல்

இயற்கை விவசாயம் செய்ய விரும்புவோர் முக்கியமாக நாடுவது இயற்கை பூச்சி விரட்டி. இதற்கான தேவை அதிக அளவில் இருப்பதால் வேளாண் துறை சார்த்த தொழில் ஈடுபட விரும்புவோர் இதனை தொடங்கலாம்.

17. துடைப்பம் தயாரித்தல்

குடிசை தொழில் என்றாலும் லாபம் தரக்கூடிய தொழில். ஆண்டு முழுவதும் இதற்கான தேவை இருப்பதால் நூற்றாண்டுகள் கடந்தும் தொய்வின்றி இந்த தொழில் நடை பெற்று கொண்டு இருக்கிறது.

18. கூடை முடைதல்

விருப்பமும், ரசனையும் இருந்தால் எல்லா தொழிலும் லாபம் தர கூடியவை. வியாபார யுக்தியை மட்டும் அறிந்து கொண்டால் உள்ளூர் சந்தை முதல் உலக சந்தை வரை கலக்கலாம்.

19. மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல்

இன்று இதற்கான சந்தை உலகம் முழுவதும் இருக்கிறது. முறையான பயிற்சி மற்றும் உரிமம் மட்டும் போதும். இவ்வகையான பொருட்களையும் நம்மால் தயாரித்து விற்பனை செய்ய இயலாம்.

Soil Analysis

20. இதர லாபம் தரும் தொழில்கள்

 • கால்நடை தீவனம் தயாரித்தல்
 • பழசாறு தயாரித்தல்
 • காடை வளர்ப்பு
 • இறால் வளர்ப்பு
 • பன்றி வளர்ப்பு
 • மசாலா தயாரிப்பு
 • இணையதளம் மூலம் விற்பனை
 • மூலிகை செடிகள் வளர்ப்பு
 • பால் சார்ந்த தொழில்
 • ஆடு வளர்ப்பு
 • விதை தர சான்றிதழ்
 • மண் பரிசோதிப்பு மையம்
 • பசுமை குடில்
 • தோட்டக்கலை

Anitha Jegadeesan
Krishi Jagran

English Summary: Are You Worrying How To Generate More Income From Your Field? Here Are Most Profitable Business Ideas Published on: 27 July 2019, 05:41 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.