டாய்லெட் பேப்பர், சமையலறைக் காகிதம். இந்த இரண்டிற்காக மட்டும் , தினமும் 40 ஆயிரம் வளர்ந்த மரங்கள் உலக காடுகளில் அழிக்கப்படுகிறது. இது சுற்றுச்சூழலுக்கு நல்லதல்ல. எனவே தான் அவசர கதியில் ஒரு புதிய வழியை உருவாக்கியிருக்கிறது 'கிளவுட் பேப்பர்' (Cloud Paper). அமெரிக்காவிலுள்ள இந்நிறுவனம், வீடுகளுக்கு மாத சந்தா முறையில் டாய்லெட் பேப்பர் மற்றும் சமையலறைக் காகித ரோல்களை தயாரித்து அனுப்புகிறது. கிளவுட் பேப்பர், இனி, மூங்கிலால் தயாரான காகிதத்தையே டாய்லெட் பேப்பருக்கும், சமையலறைக் காகிதத்திற்கும் பயன்படுத்துவது என்று முடிவெடுத்திருக்கிறது.
மூங்கில் (Bamboo)
இதற்காக, நன்கு பராமரிக்கப்படும் காடுகளில் வளரும் மூங்கில்களை, முறையான சான்றுகள் பெற்ற பிறகே வாங்குவது என்ற கொள்கை முடிவை எடுத்துள்ளது. புல் வகையை சேர்ந்த மூங்கில், மிக வேகமாக வளரக்கூடியது. பராமரிக்கப்பட்ட காட்டில் வளரும் மூங்கிலை, வெட்டிய இடத்தில், அடுத்த அறுவடைக்குத் தேவையான மூங்கில் குருத்துவிட்டு வளரும். இதனால், கிளவுட் பேப்பர் ஒரே இடத்தில் மூலப் பொருளை வாங்க முடியும். இப்படி பல நிறுவனங்கள் முடிவெடுத்தால், காடுகள் வெட்டப்படுவது குறையும்.
காகித உற்பத்தி (Paper Production)
கிளவுட் பேப்பரின் காகித உற்பத்தி முறையும், வீடுகளுக்கு சந்தா முறையில் விற்கும் முறையும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எனவே, இதில் அமேசானின் ஜெப் பெசோஸ் உட்பட பல பெருந்தலைகள் முதலீடு செய்து பங்குகளை வாங்கியுள்ளனர்.
பசுமைத் தொழில்களுக்கு இப்போது சந்தை மதிப்பு கூடி வருகிறது. இதனால் பசுமை காகிதத்திற்கும் மவுசு கூடியுள்ளது. இனி மக்கள் அனைவரும் இயற்கையைக் காக்கும் மகத்தான பணியில் ஈடுபடுவதே சாலச் சிறந்தது.
மேலும் படிக்க
இதைத் தெரிந்து கொண்டால் காய்கறித் தோல்களை இனி வீசியெறிய மாட்டீர்கள்!
உலகிலேயே மிக அழகான கட்டடம்: எதிர்கால அருங்காட்சியகம் திறப்பு!