1. வாழ்வும் நலமும்

இதைத் தெரிந்து கொண்டால் காய்கறித் தோல்களை இனி வீசியெறிய மாட்டீர்கள்!

R. Balakrishnan
R. Balakrishnan
Vegetable skins

பொதுவாகவே சில காய்கறிகளை அதன் தோலை நீக்கித் தான் சமைப்பது வழக்கமாக இருந்து வருகிறது. சமையலுக்கு பயன்படுத்தப்படும் காய்கறிகளின் தோல்களை வீசி எறியாமல் அதனை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது பற்றி தெரிந்துகொள்ளலாம்.

வாழைக்காய் மற்றும் உருளைக்கிழங்கு தோலோடு சேர்த்து சமைப்பதால், அவற்றில் உள்ள வாயுவுக்கு தோல்களே மருந்தாகின்றன.

காய்கறிகளின் தோல்கள் (Vegetables Skin)

  • பீர்க்கங்காய்த் தோலை வதக்கி உப்பு, காரம், புளி சேர்த்து துவையல் அரைக்கலாம்.
  • பீட்ரூட், கேரட்: இவற்றின் தோலை சுத்தம் செய்து உளுந்தம்பருப்பு, வரமிளகாய், தேங்காய், பெருங்காயம் சேர்த்து, வதக்கி அரைத்து உப்பு சேர்த்து பருப்பு கூட்டு செய்யலாம். சப்பாத்தி, பூரிக்கு தொட்டுக் கொள்ளலாம்.
  • வெள்ளரிக்காய், கேரட், பூசணிக்காய், மாங்காய் போன்றவற்றின் தோலை மேலாக, லேசாக சீவினால் போதும். அவற்றின் தோல்களின் அடியில் நிறைய சத்துக்கள் உள்ளன.
  • வேக வைத்த வாழைக்காயின் தோலை நறுக்கி, வதக்கி, தாளித்துவிட்டால் சாப்பாட்டுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
  • இஞ்சியை சுத்தம் செய்து, தோலுடன் நறுக்கி காய வைத்தால் சுக்கு கிடைக்கும்.
  • வெள்ளரிக்காய்த் தோலை அரைத்து முகத்தில் பூசிக்கொண்டு அரைமணி நேரம் கடந்த பின்பு தண்ணீரில் கழுவிக் கொண்டால் சருமத்தின் உள்ளே உள்ள நுண்ணிய துளைகளில் இருக்கும் அழுக்குகளைப் போக்கிவிடும்.

எலுமிச்சை சாறு சிந்தி, தரை வெள்ளையாக்கி விட்டால், பூசணிக்காய்த் தோலால் தேய்த்துவிட்டு கழுவினால் கறை நீங்கும்.

வெள்ளரிக்காய்த் தோலால் எவர்சில்வர் பாத்திரங்களைத் தேய்த்தால் சுத்தமாகவும், பளிச்சென்றும் இருக்கும்.
காய்கறிகளிலும், அவற்றின் தோல்களிலும் நார்ச்சத்து, வைட்டமின், இரும்பு, கால்சியம் சத்துக்கள் நிறைய உள்ளதால், எதையும் வீணாக்காமல் பயன்படுத்துவோம்.

மேலும் படிக்க

உடல் எடையை குறைக்க தினந்தோறும் உடற்பயிற்சி அவசியம் தானா?

கண் நோய்கள் வராமல் தடுக்க மருத்துவரின் அறிவுரைகள்!

English Summary: Knowing this you will no longer throw away vegetable skins! Published on: 22 February 2022, 07:47 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.