மலரையும், மங்கையரையும் எப்போதும் பிரித்துப்பார்க்க இயலாது. ஏனெனில் எப்போதுமே மங்கலத்தின் அடையாளமாக மலர்கள் கருதப்படுகின்றன.
தொடரும் மலர் பந்தம் (Continuing floral bond)
தொட்டில் முதல் சுடுகாடு வரை நாம் அனுமதிக்கும் ஒன்றே ஒன்று மலர். எவ்வளவு விலை விற்றாலும் ஒரு முழம் பூவையாவது வாங்கி தலையில் வைத்துக் கொள்ளவே பெண்கள் எப்போதும் விரும்புவார்கள்.
சுமங்கலியின் அடையாளமாகக் கருதப்படும் மலர்களை விரும்பாத மகளிரே இல்லை எனலாம்.
பூ கலாச்சாரம் (Flower culture)
ஒரு திருவிழா ஆகட்டும் அல்லது கல்யாணம் ஆகட்டும் பூக்களே முதலிடம் வகிக்கும். அந்த அளவிற்கு பூக்கள் நம் கலாச்சாரத்தோடு பின்னி பிணைந்தது. எனவே பூக்கள் மற்றும் பூக்கள் சார்ந்த தொழில்களைப் பற்றி பார்ப்போம் .
இரண்டு வகை (Two types)
பூக்கள் சார்ந்த தொழில்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
-
உணவு சார்ந்த பூக்கள்
அழகு சார்ந்த பூக்கள் பொறுத்தவரை தமிழ்நாட்டில் மல்லிகை பூ , ரோஜா , சம்பங்கி , முல்லை, சாமந்தி, கனகாம்பரம் உள்ளிட்ட பூக்கள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன.
அழகு சாதன பொருட்கள் (Beauty Aids)
இன்றைக்கு உள்ள நிறைய அழகு சாதனா பொருட்கள் ரசாயனத்தால் ஆனது . நீங்கள் இயற்கையான பூக்களை வைத்து அழகு சாதன பொருட்கள் தயாரிக்கலாம் . ஒரு அழகு நிலையம் அல்லது ஸ்பா ஆரம்பிக்கலாம்.
அலங்காரப் பூக்கள் (Decorative flowers)
பொது நிகழ்ச்சிகள், கோயில் திருவிழாக்கள், திருமணங்கள் போன்றவற்றிக்கு வித விதமாக அலங்காரம் செய்ய பூக்கள் பெருமளவிற்கு பயன்படுகிறது. ஒரு தனித்துவமாகப் பூக்களை வைத்து அலங்காரங்கள் செய்யும் போது உங்கள் தொழில் அதிக லாபம் தரும்.
பொக்கே மற்றும் உலர்மலர்கள் விற்பனை (Sale of bokeh and dried flowers)
பொது நிகழ்ச்சிகள் , வரவேற்பு போன்றவற்றிற்கு பொக்கே அதிகம் தேவை படும் குறைந்த செலவில் அதிக லாபம் ஈட்டக்கூடிய தொழிலாகும். இதற்காக ஒரு இணையதளம் தொடங்கி வித விதமான பொக்கேக்களை செய்து காண்பித்தாள் நல்ல விற்பனையாகும்.
வாசனை திரவியங்கள்
பூக்களில் இருந்து அதிக அளவு எண்ணெய் மற்றும் வாசனைத் திரவியங்கள் தயாரிக்கப் படுகின்றன. ஆனால் இந்த தொழில் நல்ல லாபம் கொடுத்தாலும் ஆரம்பகட்ட முதலீடு என்பது கொஞ்சம் அதிகம்.
பூ விற்பனை மற்றும் ஏற்றுமதி (Flower sales and export)
-
நீங்கள் பூக்களாக விற்கும் பொழுது பூக்களை அதிகபட்சம் 7 நாட்கள் வரைதான் சேமித்து வைக்கமுடியும்.
-
எனவே உங்களுடைய பூ விற்பனை ஒரு குறிப்பிட்ட பகுதி என்றில்லாமல் பறந்து விரிந்ததாக இருக்கவேண்டும். அதற்கு நீங்கள் எப்படி ஏற்றுமதி செய்வது என்பதைத் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.
-
துபாய் , அமெரிக்கா நாடுகளுக்குப் பூக்கள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
-
இந்த ஏற்றுமதி பற்றிய விவரங்களை இணையதளத்தில் நிறைய உள்ளன தெரிந்து கொள்ளலாம்
உணவு சார்ந்த பூக்கள்
உணவு சார்ந்த பூக்களைப் பொறுத்தவரை பெரும்பாலும் இயற்கை மருத்துவத்திற்கே பயன்படுகின்றன. இவற்றை மருத்துவத்திற்காக உற்பத்தி செய்து விற்கலாம். உதாரணமாக செம்பருத்தி பூக்கள், சூரியகாந்தி பூக்கள், ரோஜாவிலிருந்து குல்கந்து தயாரிக்கப்படுகிறது . இதைத் தவிர்த்து தேனீர் மற்றும் பானங்கள் தயாரிக்கப் பூக்கள் பயன்படுகின்றன.
மேலும் படிக்க...
ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது - தலைவா என்று அழைத்து வாழ்த்துக் கூறிய மோடி!
நிலக்கடலையில் புரோடினியா புழுக்கள்- கட்டுப்படுத்த சிறந்த வழிகள்!
பூக்காதச் செடிகளையும் பூக்கவைக்கும், ஆரஞ்சு தோல் பூச்சிக்கொல்லி!