1. தோட்டக்கலை

கோடையில் மலர்கள் பராமரிப்பு - எளிய டிப்ஸ்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Summer Flower Care - Simple Tips!
Credit: Times Of India

கோடைகாலம் வந்துவிட்டாலே மனிதர்களுக்கு மட்டுமல்ல, மண், மரம், செடி,கொடிகள், கால்நடைகள், விலங்குகள் என அனைத்துக்குமே, சிக்கல்தான்.

பிரச்சனைகள் (Problems)

தாங்கமுடியாத வெப்பம், தண்ணீர் தட்டுப்பாடு, குடிநீர் பற்றாக்குறை, மேய்ச்சலுக்கு விடமுடியாமை, பசுந்தீவனங்கள் பற்றாக்குறை என பிரச்சனைகளின் பட்டியல் நீளும்.

எனவே கோடை காலம் உக்கிரம் அடைவதற்கு முன்பே, சில பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றினால், வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம்.

மலர்கள் பராமரிப்பு (Flowers care)

அந்த வகையில், கொளுத்தும் கோடை காலத்தில், அதிக வெப்பத்தால் பாதிக்கப்படும் மலர்களை எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்துப் பார்ப்போம்.

மல்லிகை பூ (Jasmine)

  • மல்லிகை செடி மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பூக்க துவங்கும்.

  • செடிகளை முதலாண்டில் நட்டு பூக்கள் மகசூல் எடுத்திருந்தாலும் இரண்டாவது ஆண்டிலிருந்துதான் ஒரு அளவான மகசூல் இருக்கும்.

  • நல்ல வளர்ச்சியான மொட்டுக்களை அதிகாலையில்தான் பறிக்கவேண்டும்.

  • கோடை காலத்தில் குறிப்பாக மொட்டில் அல்லது இளம் மொட்டில் புழுக்களின் தாக்கம் அதிகம் இருக்கும். இதனை கட்டுப்படுத்த 10 லிட்டருக்கு 50 மில்லி பெவேரியா பேசியான தெளிக்கலாம்.

கனகாம்பரம் பூ (Kanakambaram flower)

  • பெதுவாக இந்த காலகட்டத்தில் கனகாம்பரத்தில் அசுவினி பூச்சிகளின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

  • ஒன்றுடன் ஓன்று ஒட்டி ஒரு அடைபோல் ஒட்டி சாற்றினை உறிஞ்சி எடுத்துவிடும்.

  • இதனைக் கட்டுப்படுத்த வெர்டிசிலியம் லக்கானி 10 லிட்டருக்கு 50 மில்லி கலந்து தெளிக்கலாம்.

  • அடுத்ததாக வாடல் நோய் துவட்டி எடுக்கும். அவ்வாறு கனகாம்பர பூச்செடியில் வாடல் நோய் தென்பட்டால் 10 லிட்டருக்கு 50 மில்லி என்ற அளவில் சூடோமோனஸைக் கலந்து தெளிக்க வேண்டும்.

முல்லை பூ (Rotana flower)

  • இந்த காலகட்டத்தில் இலை தின்னும் புழுக்களின் தாக்கம் இருக்கும்.

  • அதனைக் கட்டுப்படுத்த பேசில்ஸ் துருஞ்சியன்சிஸ்-ஸை 10 லிட்டருக்கு 50 மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.

செண்டு மல்லி

  • சிவப்பு சிலந்தி பூச்சிகளோடு தாக்குதல் தென்படலாம்.

  • இந்தப்பூச்சிகள் செண்டுமல்லி பூக்களின் சாற்றை உறிஞ்சுவிடும்.

  • இதனைக் கட்டுப்படுத்த வெர்டிசீலியம் லக்கானியை, 10 லிட்டருக்கு 50 மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்கவேண்டும்.

  • சிவப்பு நிறத்தில் இலைப்புள்ளி நோய் தாக்கம் இருந்தால் சூடோமோனஸ் தெளிக்கலாம்.

மேற்கூறிய அனைத்தும் பூக்கள் பூத்த, 7-வது மற்றும் 14-வது நாட்களில் தெளிக்கலாம். இதனை மாலை வேளைகளில் 4 மணிக்கு மேல் தெளிப்பது நல்ல பலன்களைத் தரும்.

மேலும் படிக்க...

தரமான பட்டுக்கூடுகள் உற்பத்திக்கு ஊட்டச்சத்து மேலாண்மை முக்கியம்!

தென்னையில் நோயின் தீவிரத்தைக் குறைக்க - ஊடுபயிராக வாழை!

சிறுதானியங்களை சந்தைப்படுத்தி விற்பனை செய்த பள்ளி மாணவர்கள்!

English Summary: Summer Flower Care - Simple Tips! Published on: 20 March 2021, 07:05 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.