Blogs

Tuesday, 13 December 2022 10:35 AM , by: Elavarse Sivakumar

திருமண நிகழ்வின் போது வித விதமான போட்டோஒ ஷூட் நடத்துவது கேரளாவில் மிகவும் பிரபலம். அப்படி நடந்த ஒரு போட்டோ ஷூட்டில், திருமண ஜோடியால் கடுப்பாகிப்போன யானை, மட்டையைத் தூக்கி வீசி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியது.

திருமணம்

திருமண  போட்டோ ஷூட் நிகழ்வுகளின் போது பல்வேறு சுவாரசிய சம்பவங்களும் அரங்கேறுவது வழக்கம். அந்த வகையில், கொல்லம் மாவட்டம் பரக்குளத்தில் அண்மையில்  கிரீஷ்மா - ஜெய்ஷங்கர் தம்பதிக்கு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதி துபாயில் ஐடி துறையில் பணியாற்றி வருகின்றனர். திருமணத்திற்கு பின்னர் தம்பதி பன்மனத்தில் உள்ள இந்து மத வழிபாட்டு தலமான பன்மன சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு சென்றனர்.

யானைக்கு உணவு

இந்த கோவிலில் சரவணன் என்ற யானை கோவில் நிர்வாகத்தால் வளர்க்கப்பட்டு வருகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த யானைக்கு உணவு வழங்குவது, வணங்கி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

சிறுவயது முதல் மணமகள் கிரீஷ்மாவும் சரவணன் யானைக்கு உணவு வழங்கியுள்ளார். இந்நிலையில், மணமகள் கிரீஷ்மாவும், மணமகன் ஜெய்ஷங்கரும் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தி விட்டு யானை சரவணனிடம் நின்று போட்டோ ஷூட் செய்துள்ளனர். மணக்கோலத்தில் யானை சரவணன் முன் நின்று மணமக்கள் புகைப்படங்கள், செல்பி, வீடியோ என்று பல்வேறு கோணத்தில் போட்டோ ஷூட் செய்துள்ளனர்.

கடுப்பான யானை

மணமக்களின் செயலால் ஆத்திரமடைந்த யானை சரவணன் தன் அருகே கிடந்த தென்னை மட்டையை தும்பிக்கையால் எடுத்து மணமக்கள் மீது வீசியது. இதில், தென்னை மட்டை மணமக்கள் தலைக்கு இடையே பறந்து சென்றது. இதில், மணமகனின் தலையை அந்த தென்னை மட்டை உரசி சென்றது. யானை வீசியதில் மணமக்களின் தலைக்கு இடையே தென்னை மட்டை பறந்து வருவதை புகைப்பட கலைஞர்கள் வீடியோவாக எடுத்துள்ளனர்.

சிங்கிள்

இந்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. நானே சிங்கிளாக இருக்கேன் என் முன்னே போட்டோ ஷூட்டா என்ற பதிவுகளுடன் சில சமூகவலைதளவாசிகளும் அந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் படிக்க…

காய்கறி சாகுபடிக்கு ரூ.80,000 மானியம்- தொடர்பு தொலைபேசி எண்கள் அறிவிப்பு!

மத்திய அரசு வழங்கும் ரூ.10,000-Check செய்வது எப்படி?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)