மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 13 February, 2021 4:45 PM IST

தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (நபார்ட்) அண்மையில் 2021-22 ஆண்டுக்கான மாணவர் வேலைவாய்ப்பு திட்டத்திற்கான (எஸ்ஐஎஸ்) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும், தகுதி வாய்ந்த மற்றும் ஆர்வமுள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. நபார்டு எஸ்ஐஎஸ் ஆட்சேர்ப்புக்கு பிப்ரவரி 09 முதல் மார்ச் 05 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நபார்ட்டின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் - nabard.orgயில் நேடியாக விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நபார்ட் அறிவிப்பின் படி ஏப்ரல் 21, 2021 முதல் ஆகஸ்ட் 31, 2021 வரை 8-12 வாரங்களுக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்படும் (ஓரியன்டேஷன் -1 வாரம், தரவு சேகரிப்பு / கள ஆய்வு - 2 முதல் 4 வாரங்கள், வரைவு அறிக்கை 3 முதல் 4 வாரங்கள், இறுதி அறிக்கை 2 முதல் 3 வாரங்கள் வரை).

மேலும், கிராமப்புற மேம்பாட்டுத் துறையில் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் (நாபார்ட்) முழு உரிமையாளரான பிரிவு 8 நிறுவனமாக நாபார்ட் ‘NABFOUNDATION’ துணை நிறுவனம் பதிவு செய்யப்பட்டுள்ளது..

ஆன்லைன் விண்ணப்பிக்கும் தேதி:  09 பிப்ரவரி 2021 முதல் 05 மார்ச் 2021 வரை

நபார்ட் எஸ்ஐஎஸ் - விண்ணப்பிப்பது எப்படி?

தகுதியுள்ள நபர்கள் nabard.org அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து நேரடியாக விண்ணப்பிக்கலாம்

 

நபார்ட் SIS விவரங்கள்

நபார்ட் SIS 2021-22 - 75 காலிப் பணியிடங்கள் (பிராந்திய அலுவலகங்களுக்கு 65 இடங்கள் / தலைமை அலுவலகத்திற்கு 10 இடங்கள்)

சம்பளம்:

  • Stipend : உதவித்தொகை - ரூ.18000 /மாதத்திற்கு - {குறைந்தபட்சம் 8 வாரங்கள் (2 மாதங்கள்) முதல் அதிகபட்சம் 12 வாரங்கள் (3 மாதங்கள்}

  • Field visit allowance : கள வருகைக்கான தொகை (அனைத்து செலவுகளையும் சேர்த்து) - அதிகபட்சம் 30 நாட்களுக்கு - ரூ.2000/ஒரு நாளைக்கு (8 NER மாநிலங்களுக்கு) மற்றும் ரூ. 1500/ஒரு நாளைக்கு (8 NER மாநிலங்களைத் தவிர)

  • Travel allowance : டிக்கெட்டுகள் / பிற ஆவண சான்றுகளை சமர்ப்பிக்கும் போது AC-III வகுப்பு (AC-II இல் டிக்கெட் கிடைக்காத இடத்தில் AC-II அனுமதிக்கப்படுவர்) (தலைமையகத்திலிருந்து மாவட்ட / உள்ளூர் தலைமையகத்திற்கு மற்றும் மீண்டும் தலைமையகத்திற்கு - ரூ. 6000 / ) வழங்கப்படும் அறிவிப்பு அடிப்படையில் இதர செலவுகள் - ரூ.2000 வழங்கப்படும்

நபார்ட் SIS பணியிடங்களுக்கான தகுதி

வேளாண்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் (கால்நடை, மீன்வளம், உள்ளிட்டவற்றில் முதுகலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள், வேளாண் வணிகம், பொருளாதாரம், சமூக அறிவியல் மற்றும் மேலாண்மை நிறுவனங்கள் / பல்கலைக்கழகங்களிலிருந்து அல்லது 5 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்புகளைத் தொடரும் மாணவர்கள், SIS 2021-22 க்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் படிக்க...

விவசாய அதிகாரி ஆக ஆசையா? வந்துவிட்டது உங்களுக்கான வேலை அறிவிப்பு

திருக்குறள் சொன்னால் பெட்ரோல் இலவசம்! கரூர் பெட்ரோல் பங்கின் சூப்பர் அறிவிப்பு!

வங்கிகளை விட அதிக லாபம் தரும் அஞ்சலக சேமிப்பு திட்டங்கள்! - சின்ன சேமிப்பு அதிக லாபம்!

English Summary: NABARD Provides Student Internship Scheme 2021-22 for 75 Vacancies, how to apply, Stipend and other details inside
Published on: 13 February 2021, 04:45 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now