பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 19 September, 2023 11:23 AM IST
NFC Apprentice 2023 Recruitment Details in Tamil

அணு எரிபொருள் வளாகம் (NFC-Nuclear Fuel Complex ) சார்பில் ஐடிஐ அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 206 பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு நடைப்பெற உள்ளது. பணி வாய்ப்பு குறித்த முக்கிய விவரங்கள் பின்வருமாறு-

அப்ரண்டிஸ் பணியிடத்திற்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 16 ஆம் தேதி விண்ணப்பத்தை அப்ளை செய்யும் வசதி தொடங்கியது. பிளம்பர், வெல்டர், பிட்டர், கர்பண்டர், மெக்கானிக் டீசல் என பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த 206 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் இருந்து ஆட்தேர்வு நடைப்பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  • அதிகாரப்பூர்வ இணையதளம்: www.nfc.gov.in
  • விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் மட்டுமே
  • விண்ணப்பம் தொடங்கிய நாள்: 16.09.2023
  • விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.09.2023

காலி பணியிடங்களின் எண்ணிக்கை: 206 (உதாரணத்திற்கு சில காலி பணியிடம் முறையே, பில்டர்- 42, டர்னர்-32, எலக்ட்ரீசியன் -15, மோட்டார் மெக்கானிக்-03, வெல்டர்- 16, மெக்கானிக் டீசல்- 04, ப்ளம்பர்-04, கர்பண்ட்டர்- 06)

கல்வித்தகுதி: 10 வது தேர்ச்சி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பயின்று ITI தேர்ச்சி

வயது வரம்பு: குறைந்தப்பட்சம் 18 வயது. (அரசின் இட ஒதுக்கீடு பிரிவின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. உதாரணத்திற்கு (SC/ ST-5 வருடம், OBC- 3 வருடம், Ex-Servicemen (ESM)- 03 வருடம் )

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

  • மதிப்பெண் அடிப்படையில்
  • சான்றிதழ் சரிபார்ப்பு
  • மருத்துவ சான்றிதழ்

அப்ரண்டிஸ் பணியிடத்திற்கான சம்பளம்: ரூ.7700 முதல் 8,050 வரை (பணியிடங்களுக்கு ஏற்ப மாறும்)

விண்ணப்பக் கட்டணம்: இல்லை

NFC அப்ரண்டிஸ் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் முறை:

  • முதலில் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குள் செல்லவும். (https://www.apprenticeshipindia.gov.in/ )
  • அதில் REGISTER என்னும் பகுதியில் Candidate என்பதை க்ளிக் செய்து கேட்கப்படும் தகவல்களை கவனமாக நிரப்பவும்.
  • REGISTER செய்த பின் உங்களுக்கான மெயில் ஐடி மற்றும் பாஸ்வேர்டு கொண்டு NAPS Portal-ல் லாக் இன் செய்யவும்.
  • APPRENTICESHIP OPPORTUNITIES ---> SEARCH BY ESTABLISHMENT NAME ----> Nuclear Fuel Complex-E11153600013 -----> APPLY
  • உங்களுக்குத் தேவையான ஆவணங்களின் புகைப்படம் மற்றும் கையொப்பத்தைப் பதிவேற்றவும்.

விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பித்த பிறகு, இறுதியாக அதன் பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும். தகுதியான நபர்கள் மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்களுக்கு அதுக்குறித்த தகவல் மெயில் மூலம் தெரிவிக்கப்படும். மெரிட் தேர்வு எந்த தேதி அறிவிக்கப்படும் என தற்போது வரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. விண்ணப்பிக்கும் காலக்கெடு முடிந்த பின் அதுக்குறித்த தகவல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண்க:

அப்ளை செய்தும் ரூ.1000 கிடைக்கலயா? 30 நாள் டைம்- யூஸ் பண்ணிக்கோங்க

தங்கத்தின் விலை தொடர்ந்து 5 நாளாக உயர்வு- பொதுமக்கள் ஷாக்

English Summary: NFC Apprentice 2023 Recruitment Details in Tamil
Published on: 19 September 2023, 11:23 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now